Subscribe Us

காலிமுகத்திடலில் சீனாவின் போட் சிட்டி நிர்மாணம் தொடர்பில் மீள்பரிசீலனை


கொழும்பு காலிமுகத்திடலில் கடலை நிரப்பி மேற்கொள்ளப்பட்டு வரும் சீனாவின் போட் சிட்டி நிர்மாணத்திட்டம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளது.
இந்த திட்டத்துக்கான கடல்பரப்பு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உரிமையாண்மை அடிப்படையில் சீனாவின் கொம்யூனிகேசன் கொன்ஸ்ரக்சன் கொம்பனி லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவும் இந்த கட்டுமானம் தொடர்பில் தமது ஆட்சேபனையை வெளியிட்டு வருகிறது.
தமது கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு சென்றுதிரும்பும் நிலையில் சீனாவின் இந்த கட்டுமானம் அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக இந்தியா அச்சம் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் ஒரு நாட்டின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மற்றும் ஒரு நாடு உரிமையாண்மை என்ற அடிப்படையில் காணியை பெற்றுக்கொள்ள முடியாது என்று புதிய முதலீட்டு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள நிலம் ஒன்றை விற்பனை செய்யும்போது அல்லது அதன் உரிமையை மாற்றும் போது அது துறைமுகத்துக்கு அருகில் அமைந்திருந்தால் பிரச்சினை ஏற்பட ஏது உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திட்டத்தின்படி 108 ஹெக்டேயர் நிலம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதில் 20 ஹெக்டேயர் நிலம் 99 வருட குத்தகைக்கு வழங்கப்பபட்டுள்ளது.
சீன ஜனாதிபதியே இந்த திட்டத்தின் கட்டுமாணப்பணிகளை ஆரம்பித்து வைத்தார். துறைமுக அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 233 ஹெக்டேயர் நிலம் பெறப்பட்டுள்ளது.
அதில், கடைத்தொகுதிகள், நீர்நிலை விளையாட்டுக்கள், சிறிய கொல்ப் திடல், ஹோட்டல்கள், மாடிவீடுகள் என்பன அமைக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments