பெரும்பாலும் பொது வேட்பாளரின் வெற்றி உறுதியாகி வரும் வகையில் தொடர்ச்சியாக அவர் முன்னிலை வகித்துவரும் நிலையில் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்து விலகத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி அலரி மாளிகையை விட்டும் வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக ஐ.தே.க தலைமைத்துவக்குழு சார்பாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஜனாதிபதிக்கு கிடைக்கக் கூடிய தொகுதிகளில் பெரும்பாலானவற்றின் முடிவுகள் ஏற்கனவே வெளிவந்திருப்பதும் வட – கிழக்கு உட்பட அனைத்து ஐ.தே.க தொகுதிகளும் பொது வேட்பாளரை வெற்றி பெறச்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்து ஜனாதிபதி ஒதுங்கிக் கொள்வதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments