முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத களனியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றுக் காலை இருதய நோயினால் உயிரிழந்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமொன்றில் பணிப்பாளராக கடமை புரிந்த நிமல்சிரி அபேவிக்ரம என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 8 ஆம் திகதி தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொது வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து வரும் அறிகுறியை அறிந்து கொண்டபோது நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு இவர் மரணமடைந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.


0 Comments