சர்வாதிகார ஆட்சியில் சட்டத்துக்கும் ஊடக தர்மத்துக்கும் முரணான, எதிரான வகையில் அதிகளவான இணையங்கள் இலங்கையில் பார்க்க முடியாதபடி தடை செய்யப்பட்டிருந்தன, இதன் மூலம் சுதந்திரமாக தகவல் அறியும் உரிமை இல்லாது செய்யப்பட்டது. இவ்வாறு முடக்கப்பட்ட அனைத்து இணையங்கள் மீதான தடைகளும் விரைவில் நீக்கப்படவுள்ளன. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
பல தமிழ், முஸ்லிம் இணையங்களைத் தடை செய்யுமாறு சர்வாதிகார ஆட்சிக்கு ஆலோசனை கூறியவர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியலும் என்னிடம் உள்ளது. அவ்வாறு ஆலோசனை கூறியவர்கள் வேறு யாருமல்ல.. சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களுமே.
மேலும் ஊடகத்துறை அமைச்சு, தகவல் திணைக்களம், இலங்கை தொலைத் தொடர்ப பரிவர்த்தனை நிலையம் ஆகியவற்றில் பணி புரியும் உயர்மட்ட அதிகாரிகளில் சிலர் தங்களது விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையிலும் கடந்த காலங்களில் இணையங்கள் முடக்கப்பட்டன.
உள்ளுர், மற்றும் வெளிநாடுகளிலிருந்து இயங்கும் பல இணையத்தளங்களை இலங்கையில் பார்க்க முடியாதபடி தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான இணையங்கள் தொடர்பான தகவல்களை (பெயர்களை) எனக்கு தந்து உதவுங்கள். அவற்றினை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வர முயற்சிப்பேன்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


0 Comments