தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளைக் கூட பிரத்யேக வங்கிக்கணக்கொன்றில் வைப்பிலிட்டு சிறுநீரக பாதிப்புக்குள்ளானோருக்கு வழங்க உதவும் படி பொது வேட்பாளராக கோரிக்கை முன்வைத்திருந்த ஜனாதிபதி மைத்ரிபால இன்றைய தினம் பொலன்நறுவ மாவட்டத்திலிருந்து சிறுநீரக பாதிப்புக்குள்ளானோருக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
சிறுநீரக பாதிப்புடன் வாழ்வோருக்கு மாதாந்தம் ரூ.3000 உதவித் தொகை வழங்கும் இத்திட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


0 Comments