கட்டண நிலுவை மாத்திரமன்றி முறையான அனுமதிப் பத்திரமும் இல்லாது இயங்கி வந்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாசின் விமானப் பயிற்சி நிறுவனத்தினால் (Cosmos Aviation Pilot training school) உபயோகிக்கப்பட்டு வந்த கட்டிடத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சீல் வைத்தள்ளது.
இது மாத்திரமன்றி கட்டுநாயக்க விமானத் தளத்திலும் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் ஒருவர் ரூ.10,000 மாத்திரமே வாடகை செலுத்திக்கொண்டு நடாத்திவந்த விமானப் பயிற்சி நிறுவனமொன்றையும் மூடி விடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


0 Comments