இந்த நிலையில் தற்போது இயங்கி வரும் நிர்வாக
உறுபினர்களை பிரதானமாக தலைவர் ஜனாப் ஷாஜஹான் அவர்களை மாற்ற வேண்டும் என பல
குழுக்கள் கிழம்பி உள்ளது. அவரது நாடு நிலையான செயற்பாடு பல மாபிய குழுக்களுக்கு
தடையாக இருப்பதே இதன் உள்நோக்கம் ஆகும்.
நாளை நடைபெற இருக்கும் நிர்வாக தெரிவில்
புதுக்குள்ளாக்கள்
நாளை நடைபெற இருக்கும் நிர்வாக தெரிவில்
புதுக்குள்ளாக்கள் அணிந்த சிலர் எப்படியாவது இந்த பெரியபள்ளி நிர்வாக சபை தலைவர்
பதவியை நமது கைக்குள் கொண்டுவர வேண்டும் என்ற சுய நலத்துடன் தனது எதிர்கால அரசியல்
ஆசையை இதன் மூலம்நிறைவேற்ற புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து கிழம்பி
இருக்கிறார்கள். இவரோ தனது பெயரை கூட தமிழில் எழுத முடியாதவர் இவருக்கு பின்னல்
அதே போன்று, எடுத்ததுக்கெள்ளாம் கச்சை கட்டும் ஒரு கூட்டமும் அதன் தலைவரும். இவர்கள்
தெரிந்தது களக்கத்தியும் கம்பும்.
நாங்கள் என்றும் பழைமைவாதிகள் தான் “அப்பா
காலத்து நிர்வாகம் தான் தேவை”
எமது ஊருக்கு தேவை பழமை தான் புதியென புகுத்த
வேண்டாம், நாம் இருக்கும் வரை மதுரஷாவும் அப்பா காலம் போலதான் இருக்கும் இனி பள்ளி
நிர்வாகமும் அப்படிதான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில செல்லகாசுகள் மதுராஷா
வளவினில் தினமும் குசுகுசு கூட்டம் போட்டு நாளைய களத்தில் தலைமை பதவியை குறி வைத்து
இறங்க இருக்கிறது. “ஒரு வகையில் இவர்கள் சொல்வதும் சரிதான், படித்தவர்கள் முன்வருவதில்லை
நாம் சரி முன்வந்து களக்கத்திகளிடம் இருந்து பாதுகாத்து கொள்கிறோம் என்று
நினைகிறார்கள் போலும்.
ஜனசவிய ஆசிரயர் பதவி கிடைத்த “ கற்பிட்டியின்
புத்தி ஜீவிகள் குழு”
கற்பிட்டியின் புத்திஜீவகள் குழு என
சொல்லிக்கொண்டு பாடலையை நாசம் செய்துவிட்டு இன்று பெரியபள்ளியையும் நாசம் செய்யும்
நோக்குடன் இரண்டு கிராம சேவகர்களை துணையாக வைத்துகொண்டும் சில அரசியல்
அல்லககைகளையும் இணைத்து களம் இறங்க இருக்கிறது இந்த குழு.
இதில் ஒரு விசேடமாக விடயம் குறிப்பட வேண்டும்
அரசியல் சாணக்கியம் தெரிந்த கற்பிட்டியின் அரசியல் மாகான்கள் சிலர் இன்னும்
கோமாவில் உள்ளனர், மஹிந்த ராஜபகசவின் தோல்வியின் பின் கோமாநிலைக்கு சென்ற இவர்கள்
நாளை பதவிகள் என்றதும் புத்துயிர் பெற்று வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
பதவிக்கி தகுதியானவர்கள் வர வேண்டும்; சதி
நடந்தால் தட்டிக் கேட்போம் என ஒரு இளம் பட்டாளம்.
நாளை நடைபெறவிருக்கும் கற்பிட்டி பெரியபள்ளி
நிர்வாக சபை தெரிவில் தகுதியானவர்கள் உள்வாங்கப்டல் வேண்டும், களக்க்த்திகளும்,
அகப்பைகளும் நிருவாக சபைக்குள் வந்தால் நாம் ஒரு குழுவை தெரிவு செய்துள்ளோம் களக்க்த்திகளும்,
அகப்பைகளும் எதிராக களத்தில் இறக்குவோம். படித்த, பண்புள்ள, மார்க்க அறிவுள்ள
பதவிகளை துரத்தி செல்லாதவர்களை நாம் இனங்கண்டு வைத்துள்ளோம், நாளைய சதிகளை நாம்
இவர்களை வைத்து தகர்ப்போம். எனக்கூறும் இளம் பட்டாளம்.
நாளை நடக்க இருப்பை இருக்க; நடந்துமுடிந்த சில
கூத்துகளையும் உங்கள் முன் கொண்டு வர விரும்புகிறோம்.
பஷார் ஜும்மா பள்ளியின் நிர்வாக தெரிவு
அண்மையில் நடைபெறுவதாக அறிவித்து ஜும்மா தொழுகையின் பின்னர் தெரிவுகள் நடைபெறதயாராகி
இருந்தவேளை, கற்பிட்டியின் அரசியல் சாணக்கியன், அரசியல் அறிஞ்சர் என்று கூறும் சிலரின்
முயற்சியால் இது தடை செய்ப்பட்டு தற்போதுள்ள நிருவாகிகள் சரியாக தான் கடமையை
செய்கிறார்கள் புதிய நிருவாகம் ஒன்று தேவை இல்லை என கூறி மக்கள் மனதை மாற்றி அதை நடைபெறவிடாமல்
ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஆபதொளி மண்டலக்குடா ஜும்மா பள்ளியின்
நிருவாக சபை தெரிவு கடந்த வாரம் இடம்பெற இருந்தது. ஜும்மா தொழுகையின்பின்னர்
மக்கள் யாரும் இதில் பங்கிகொள்ளாமல் சென்றதால் தாமாகவே தொடர்ந்து இயங்குவதாக
தீர்மானித்த நடப்பு குழு அவ்விடத்தில் இருந்து சிறிது நேரத்தில் களைந்து சென்றது
குறிப்பிடத்தக்கது.
-வெள்ளப்பா-
0 Comments