Subscribe Us

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் கே.ஏ.பி..? நஸ்மி, அலி சப்ரி, அலிகான்,முஸ்லிம் காங்கிரஸ், P.P.A.F. க்கு வழிவிடுகிறார்


நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்   முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஸ  தோல்வி அடைந்ததை அடுத்து தீவிர அரசியலில் இருந்து  புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ்  ஓய்வெடுத்துக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாக கே.பி.க்கு  மிக நெருங்கிய வட்டாரங்கள்  புத்தளம் டுடேக்கு சற்று முன்னர் தெரிவித்தனர்.

புத்தளம் தொகுதியில் ஆளும் ஐக்கிய சுதந்திர  முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் படு தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது  அதிகார எல்லைகள்  குறைவடைந்ததை அடுத்து இத்தகைய முடிவை மேற்கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தனது குடும்ப உருப்பினர்கள் மற்றும்  மிகவும் நெருங்கிய நட்பு வட்டம் என்பவற்றோடு நடத்திய கலந்துரையாடலை அடுத்து  அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நட்பு வட்டாரங்கள்,  இப்போதைய அரசியல் மாறுதலுக்கேற்ப மற்றவர்களுக்கு வழி விடுவது  சிறந்தது என்றும்,  தற்போது ஜனாதிபதியின் அணியில் இருக்கக் கூடிய  எம்.en.எம். நஸ்மி , அலி சபரி , ஏ.ஒ. அலிகான் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ், புத்தளம் அரசியல் விழிப்புணர்ச்சிக் குழு  உற்பட கட்சிக்காரகளுக்கு  புத்தளத்தின் விடயங்களை நடத்திச்செல்ல ஒரு சந்தர்ப்பம் வழங்குமாறு அவருக்கு ஆலோசனைக் கூறியதாக அறியக் கிடைத்துள்ளது.

தொடர்ந்து வேலைப்பளுவுடன் இருக்கும் நகர சபைத் தலைவரின் அழுத்தங்களை குறைப்பதற்கும் , தன்னை ஆசுவாசப்படுத்தவும் இந்த ஓய்வு மிகவும் அவசியமானது எனவும், முக்கியமாக தற்போது அதிகாரத்தில் இருக்கும் புத்தளத்து அரசியல்வாதிகளின்  செயற்பாடுகளுக்கு இடையூறு  விளைவிக்காமல் இருக்கவும் இந்த ஓய்வை எடுக்கும்படியும் அவர் வற்புறத்தப்பட்டுள்ளாக செய்திகள் கூறுகின்றன. முக்கியமாக அவரின் குடும்ப உறவுகள் அதிகமாக வற்புறுத்தியுதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில்  இதனை ஏற்க மறுத்த நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வுப் பெற இணங்கியதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் தனது நகர சபைப் பதவிக்காலத்தை  பூர்த்தி செய்து விட்டே அவரின் அரசியல் ஓய்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக  கருத்துக் கேட்க  நகர சபைத் தலைவர்  கே. ஏ. பாயிசை தொடர்ப்புக் கொண்ட போதிலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

இதே நேரம், அவர் கடந்த நாட்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்த்ரி அணியுடன் இனனந்துக் கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதனை அடுத்தே அவர் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக டாக்டர். ஐ. எம். இல்யாஸ் , முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். நவவி, மற்றும் கே.ஏ.பாயிஸ் ஆகியோருக்கிடையில்  சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியுடன் இணைந்துக் கொள்ள கடும் போட்டி ஏற்பட்டமை  குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலில்  சுயேட்சையாக களமிறங்கி  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசெனாவுக்காக  வாக்குத் திரட்டிய டாக்டர் . இல்யாஸ் , நகர சபைத் தலைவரை இணைத்துக்கொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் சுதந்திரக் கட்சியின்  தலைமைகளிடம் தனது கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1986 ம் ஆண்டில்  அரசியலுக்கு வந்த கே.ஏ. பாயிஸ் முன்னாள் பிரதியமைச்சராவர்.

( நமது நிருபர் )

-Thanks : Puttalamtoday

Post a Comment

0 Comments