மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பல்வேறு அநியாயங்களுக்கு உட்பட்டவர்கக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஜே.வி.பி. விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
''ராஜபக்ஷ ஆட்சியினால் அநியாயத்துக்கும் பழிவாங்களுக்கும் உற்பட்டோரைத் தேடும் குழு'' எனப் பெயரிடப்பட்ட இக்குழுவினால் ராஜபக்ஷகளின் அச்சுருத்தல் அழுத்தம் காரணமாக இழந்துபோன தமது சொத்து, தொழில், வாழிடம், கல்வி, காணாமல் போனோர் பற்றி கண்டறிந்து அவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்ககொடுக்கப்படும் என ஜே.வி.பி. மேல் மாகாண சபை உறுப்பினர் நலிந்த ஜயதிச்ச கூறினார்.
அவ்வாறு அநியாயமிழைக்கப்பட்டவர்கள் கீழ்தரும் முகவரி, தொலைபேசி இல., மின்னஞ்சல் ஊடாகத் தொடர்புகொள்ளலாம்:
Address: 43/20, நுகேகொடை பிளேஸ், பிலிய்நதல வீதி, மஹரகம
Tele: 011 - 2896394 , 071 810 6863
Email: politicsandsrilanka@gmail.com


0 Comments