வதுரம்பையில் மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைக்கப்பட்ட மேடை தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து பாலத்காரமாக அழைத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மீதான வழக்கு பெப்ரவரி 23ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பத்தேகம நீதவான் சந்திம எதிரிமான்ன வழக்கை ஒத்திவைத்தார். சந்தேகநபரான நிஷாந்த முத்துஹெட்டிகம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதுடன் விசாரணை அறிக்கையை சமர்பிக்க பொலிஸார் தவறியுள்ளனர். அதனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் பின் வெளியில் வந்த நிஷாந்த முத்துஹெட்டிகம செய்யாத குற்றத்திற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக் கூறினார்.
ஆனால் நீதிமன்றில் நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் எதற்கும் கவலைப்படவில்லை என்றும் இன்னும் மூன்று மாதங்களில் மஹிந்த யுகம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


0 Comments