Subscribe Us

ஒரு தோரணமும் நாட்டின் தலைவர்கள் இருவரும் ஒரே காரிலும்

பொலொன்னருவை தோபாவெவ பாடசாலையில் நடைபெற்ற 'ஜனாபிநன்தன' விழாவில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மைதிரீபால சிரிசேனவும் பிரதம மந்திரி ரனில் விக்கிரமசிங்கவும் ஒரே காரில் பயணித்தனர். ஒரே ஒரு வரவேற்புத் தோரணம் மட்டும் அமைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஸ்ரீ.ல.சு.க.வின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டதற்குக் காரணங்கள் இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி சிரிசேன, 'புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு ஸ்ரீ.ல.சு.க.வின் ஆதரவு தேவை. அந்த உதவி இல்லாமல் முன்னோக்கிச் செல்ல முடியாது. பாராளுமன்றத்தைக் களைக்க முடியாதா? என்று சிலர் கேட்கலாம். அப்படி செய்தால் நூறு நாளும் முடிந்துவிடும், எமது திட்டங்களும் முடிந்துவிடும். இந்தப் பயணத்தை ஸ்ரீ.ல.சு.க.வுடன்தான் செல்ல வேண்டியுள்ளது' என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியான பின் பொலொன்னருவைக்கு சென்ற முதலாவது விஜயம் இதுவாகும்.







Post a Comment

0 Comments