Subscribe Us

header ads

புத்தளம் வாக்காளர்கள் தவறிழைக்கவில்லை

UK-யிலிருந்து: Ayshan M. Abdullah

2005 ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி அபேட்சகர் ரணில் விக்ரமசிங்க (ஜ.தே.க.) தனது தேர்தல் விஞ்சாபனத்தில் பின்வருமாறு கூறியிருந்தார்:

"யுத்தத்தை பேச்சுவார்த்தைகள் ஊடாகவும் இராஜதந்திர முறையிலும் நாட்டிலுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பேன்" ஆனால், இராஜதந்திர ரீதியான பயங்கரவாத தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாது என்று உணர்ந்த தமிழீழ விடுதலைப் புலியினரின் கைங்கரியத்தால் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்‌ஷவை தெரிவு செய்தனர்.


இத் தேர்தலின்போது இலங்கை (புத்தளம்) வாழ் முஸ்லிம்கள் ரனிலுக்கு ஆதரவளித்தனர். தேர்தல் முடிவுகளின் பின்னர் இலங்கை (புத்தளம்) வாழ் முஸ்லிம்கள் தவறிழைத்துவிட்டதாக பலரால் குற்றம் சாட்டப்பட்டோம். ஆனால் நாம் தவறிழைக்கவில்லை என்பதை தமிழீழ விடுதலைப் புலியினர் கூட அவர்களின் தோல்விக்குப் பின்னர் உணர்ந்து கொண்டார்கள்.

பேச்சுவார்த்தைகள் ஊடாகவும் இராஜதந்திர முறைகள் ஊடாகவும் உயிரிழப்புகள் இன்றி பொருளாதார அழிவுகள் இன்றி யுத்தங்களை வென்று வரலாறு படைத்தவர்கள் நாங்கள் முஸ்லிம்கள். இவை எங்களுக்கு ஹுதைபியா உடண்படிக்கையும் பத்ர் கலமும் கற்றுத்தந்த பாடல்களாகும். என்னைப் பொருத்த வரையில், இலங்கை (புத்தளம்) வாழ் முஸ்லிம்கள் தவறிழைக்கவில்லை, மாற்றமாக ஏனைய பிரதேச சகோதரர்களே தவறிழைத்தனர்.

இறுப்பினும் இராணுவத் தாக்குதல்களின் ஊடாக யுத்தத்தை வென்று நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்தேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார், ஜீரணித்துக்கொண்டோம்.

2010 ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனாதிபதி அபேட்சகர் சரத் பொன்சேகா (முன்னைநாள் தளபதி) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்:

"நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் ஆக்குவதோடு சகல இன மதங்களுக்கு இடையில் ஒற்றுமையை உருவாக்கி நாட்டை அபிவிருத்தி செய்வதாக உறுதியளித்தார்."


மீண்டும் இலங்கை(புத்தளம்) வாழ் முஸ்லிம்கள் தமது வாக்குகளை சரத் பொன்சேகாவுக்கு அள்ளி வழங்கினார்கள். ஆனால் அத் தேர்தலிலும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.

ஆனால் நடந்தது என்ன? நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அபிவிருத்தி என்ற பேரில் அரசன் தொடக்கம் ஆண்டி வரை கோடிக்கணக்கான ரூபாய்கள் கொள்ளை, அப்பாவி இலங்கை மக்கள் மீது கடன் சுமை அதிகரிப்பு, எமது தாய்நாட்டின் பண வீக்கமோ அல்லோலகல்லோலம், நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று கூறிக்கொண்டு இருந்த ஜனாதிபதிக்கு பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கலாச்சாரமும் தென்படவில்லை. நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நீதிமன்றத்திற்கு அப்பால் அலரி மாளிகையிலேயே தங்கியிருந்தது.

இவற்றை பார்க்கும் போது இலங்கை (புத்தளம்) வாழ் முஸ்லிம்களாகிய நாம் எமது வாக்களிப்பில் தவறிழைக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

உரோம பாரசீக பேரரசுகளை ஆண்ட அபூபக்கர் அஸ்ஸித்தீக், உமர் இப்னுல் கத்தாப், உஸ்மான் இப்னு அப்பான், அலீ இப்னு அபீதாலிப் போன்றோரின் ஆட்சியை முன்னுதாரணமாக கொண்ட நாங்கள் தவறிழைப்போமா? இல்லவே இல்லை. அதற்காகவே நாம் நீதியான ஒரு ஆட்சயாளனை எதிர்பார்த்து சரத்பொன்சேகாவுக்கு வாக்களித்தோம். ஆனால் சிறுபான்மையினர் தமது வாக்களிப்பில் தவறிழைத்துவிட்டதாக அபான்டமாக குற்றம் சாட்டப்பட்டோம்

நாம் சரியாக வாக்களித்தும் கூட, ஏனைய பிரதேச சகோதரர்கள் "நான்தான் யுத்த வீரன்" என்ற மாயையினால் மயங்கினார்கள். புத்தளம் வாக்காளர்கள் மீண்டும் தாம் தவறிழைக்கவில்லை என்று நிரூபித்துள்ளார்கள்.

-HISHAM PX-

Post a Comment

0 Comments