Subscribe Us

header ads

செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண்!


தபால் ஊழியரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இன்று (12) காலை பண்டாரவளை நீதிமன்றில் சரணடைந்துள்ளார். 

சட்டத்தரணி ஒருவர் ஊடாக அவர் நீதிமன்றில் சரணடைந்ததாக எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத தெரணவிடம் தெரிவித்தார். 

செந்தில் தொண்டமான் தற்போது நீதிமன்றில் உள்ளதாகவும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்ல - நியூபேர்க் தோட்டத்தில் வாக்காளர் அட்டை உள்ளிட்ட அஞ்சல் விநியோகத்தில் ஈடுபட்டு வீடு திரும்பிய எல்ல தபால் ஊழியர் ஞானசேகரன் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல் நடத்தினார். 

அதனை அடுத்து எல்ல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டு பண்டாரவளை நீதிமன்றம் செந்தில் தொண்டமானுக்கு பிடியாணை பிறப்பித்தது. 

இந்நிலையில் செந்தில் தொண்டமான் இன்று காலை நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

Post a Comment

0 Comments