Subscribe Us

header ads

மாபெரும் பொது கூட்டம் பாராளமன்ற உறுப்பினர்களான கௌரவ ஹுனைஸ் பாரூக் அவர்களின் தலைமையில் இடம்பெற உள்ளது


நாம் அனைவரும் ஏங்கி இறைவனிடம் வேண்டி நின்ற அந்த நாள் வந்துவிட்டது .கடந்த காலம் நமக்கு விதைத்துச்சென்ற கசப்பான அந்த அனுபவ விதைகளை பிடுங்கி எறியும் சந்தர்ப்பமிது. ஆம் ...வாக்கு எனும் அந்த ஆயுதத்தை கையில் எடுப்போம் ....நமது சமூகத்தின் மதச்சுதந்திரம் ,பாதுகாப்பு கௌரவமான இருப்பை உறுதி செய்யும் தருணமிது .அனைவரும் ஒன்றுபடுவோம் .புதியதோர் மாற்றத்திற்கான ஆரம்பத்திற்கு அடித்தளமிடுவோம் .

இன்ஷா அல்லாஹ் ....எதிர்வரும் ௦5 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 04.30 மணியளவில் சிலாவத்துறை மண்ணில் மாற்றத்திற்கான ஆரம்பம் ...ஒரு மாபெரும் நிகழ்வு கௌரவ பாராளமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக் , முத்தளிபாவா பாரூக் இருவரது தலைமையில் இடம்பெற உள்ளது. 

இந்த மாபெரும் பொது கூட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் ,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், கலந்து கொள்வதோடு ,ஐ.தே.கட்சியின் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

மாற்றத்திற்கான புதிய ஆரம்பத்தில் நீங்களும் தோள் கொடுக்க வாரீர் .
அலைகடலென திரண்டு இக்கூட்டத்தில் நாம் அனைவரும் சங்கமிப்போம்.
நம் மண்ணின் பலத்தை இந்த நாட்டுக்கு உணர்த்த அனைவரும் வாருங்கள் 
அணிதிரண்டு வாருங்கள் ...!


பாராளமன்ற உறுப்பினரின் ஊடக பிரிவு

-KV நிருபர்-

Post a Comment

0 Comments