அஷ்ரப் ஏ சமத்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் குளிரூட்டப்பட்ட (ஏ சீ) கூடுகள் அமைத்து உயர் ரக வகை நாய்கள் வளர்த்துள்ளதாகவும் இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினறும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.
கொழுப்பு கொலன்னாவ பிரதே கலந்துகொண்ட அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் மஹிந்த அரசர் அலரிமாளிகையில் பொழுதுபோக்குக்காக நாற்பத்து மூன்று உயர்ரக நாய்களை ஏசி செய்யப்பட்ட கூடுகளில் வளர்த்து வந்துள்ளர்.அது தவிர இருபத்து மூன்று அறிய வகை பறைவைகள் கோடிக்கணக்கான ரூபா செலவில் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
அது தவிர இரண்டு போனிகள் ஒரு குதிரை ஆகியனவும் அலறிமளிகளை கைப்பற்றப்பட்டுள்ளன.அது தவிர மஹிந்த அரசரின் சகோதரர் கோத்தா பொழுது போக்குக்காக சுறா மீன்கள் சுமார் இருபத்து ஏழு வளர்த்துவந்துள்ளர் இவைகளை பராமரிக்க கடற்படையினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.அது தவிர இருபது மில்லியன் பொருமதியான யானைகள் இரண்டு கோத்தாவின் செல்லப்பிராணிகளாக இருந்துள்ளது என என மேல் மாகாண சபை உறுப்பினறும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.
0 Comments