மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பதவியிலிருந்து நீக்கிவிட்டு மைதிரீபால சிரிசேன அவர்களை ஜனாதிபதியாக்கும் தேவையொன்று இந்த நாட்டு மக்களுக்கு ஏற்படக் காரணமாக அமைந்தவை என்ன?
ஜனநாயத்தையும் நல்லாட்சியையும் நலிவுறச் செய்வதற்கும், தனிமனிதர்களினதும் இனக் குழுக்களினதும் உரிமைகளையும் விருப்பங்களையும் புறந்தள்ளிவிட்டு, சட்டத்தின் ஆட்சியையும் பொறுப்புக் கூறலையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதினால் ஆகும்.
அதிகாரத் தன்மைகளை அதிகமதிகம் தன்வசப்படுத்திக்கொண்டும், சாதாரண சட்டத்தின் கீழ் அவசர கால சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டும், விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துடையோர் அனைவரையும் அடக்கி, ஆளும் குடும்பத்தின் தேவைகளுக்கு முதலிடம்கொடுத்து, எந்தக் குற்றத்தை செய்தாலும் தண்டனை பெறாமலிருக்கும் நிலையொன்றை உருவாக்கிக்கொண்டும், சிவில் நிருவாகத்தை அரசியல்மயமாக்கலுக்கும் இராணுவமயமாக்கலுக்கும் உட்படுத்திக்கொண்டும், தீர்மானிக்கும் நடவடிக்கையை அதிகமதிகம் தன்மையப்படுத்திக்கொண்டும், குடும்ப உறவுகளுக்கு வரப்பிரசாதங்களை வழங்கி, ஊழலும் மோசடியும் அரசாளும் அவர் மேற்கொண்ட ஏதேச்சதிகாரப் போக்கை இல்லாமலாக்க வேண்டும் என்ற தேவை இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டதினால் ஆகும்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய காரணி ஒருவகையில் அவருடைய அல்லது அவருடைய குடுப்பத்தவரிடமிருந்தோ அல்லது அவர்களுக்குக் கூஜா தூக்கியவர்களைப் பழிவாங்குவதற்கு அல்ல என்பதையும் கடந்த காலங்களில் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி பொய் புரட்டு ஏமாற்று ஆகியவற்றின் மூலம் தவறான வழியில் மோசடியாக சொந்தமாக்கிக்கொண்ட, அனுபவிக்கின்ற வரப்பிரசாதங்களையும் வேறு பயன்களையும் காப்பாற்றிக்கொடுப்பதற்காக அல்ல என்பதையும் நாம் மறக்கலாகாது.
புதிய ஆட்சியின் நோக்கமாக இருக்க வேண்டியவை சமூகங்களுக்கிடையில் அமைதியும் சமாதானமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக நலமான அரச சீர்திருத்தமும் சமூகப் பொருளாதார கலாசார கொள்கையினை உருவாக்கி செயல்படுவத்துவதும் ஆகும்.
அரசாட்சியில் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர், இன்னும் சிலர் உயிரை பணயம்வைத்து செயலாற்றியுள்ளனர், இன்னும் சிலர் சொல்லி முடியாத துன்பகளுக்கும் கஷ்டங்களுக்கும் முகங்கொடுத்துள்ளனர்.
இச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அனைவரையும் மரியாதையுடனும் கௌரவத்துடனும் நினைவுகூருவது எமது உச்ச கடமையாகும்.
கலாநிதி லயனல் போபகே
நன்றி: colombotelegraph.com
-Hisham PX-


0 Comments