Subscribe Us

header ads

பாடசாலையில் பணம் அறவிடுதல் தடை: கல்வி அமைச்சு

பாடசாலை அதிபர்கள் நிதி சேகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவம்சம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பாடசாலைகளில் மாணவர்களை புதிதாக சேர்க்கும் போதும், அதன் பின்னரும் பல்வேறு வழிகளில் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே இந்த முறைமை ஏற்படுத்தப் பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளின் தேவைக்காக பணம் அறவிடுவதனை உடன் அமுலுக்குவரும் வகையில் தடை செய்யப்படுள்ளதாகவும் காரிய வம்சம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வசதிக்கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் உளரீதியில் பாதிப்புக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வசதிக்கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் உளரீதியில் பாதிப்புக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு மேலாக நிதி சேகரிக்கப்படும் போது, அது தொடர்பில் கல்வி அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர்  சுட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments