விமல்வீரவன்சவின் மனைவி சசி போலியான ஆவணங்களை பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற முயன்றார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே கடவுச்சீட்டை வைத்திருந்த நிலையிலேயே அவர் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்தரமுல்லயை சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெறுகின்றன,
குறிப்பிட்ட நபர் தனது முறைப்பாட்டில் சசியிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் உள்ளதாக தனக்கு தகவல்கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சுசி வேறுவேறு பிறந்த திகதிகளுடன் ,வேறுவேறு தேசிய அடையாள அட்டை இலக்கங்களுடன் கடவுச்சீட்டுகளை வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ள அந்த நபர் தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.
0 Comments