முசலி இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிலாவத்துறை மண்ணில் இரு நூல்களின் வெளியீட்டு விழா ஒன்றியத்தின் தலைவர் முனாஸ் அரபாத் காசிம் தலைமையில் 25/01/2015 நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள்
மதிப்பிற்குரிய ஹுனைஸ் பாரூக் , முத்தலி பாவா
பாரூக் அவர்களும் மாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதிஉத்தீன்
பிரதேசசபைத் தலைவர் யஹியான் அவர்களும் சிறப்பு
பேச்சாளராக சமூக ஜோதி M A ரபீக் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நூல் வெளியீடு வரலாறுகளில் இரு நூல்களை ஒரே மேடையில் வெளியிட்ட
பெருமை முசலி இளைஞர் ஒன்றியத்தையே சாரும்.
இந்த விழாவிலே நூல் ஆய்வு நூல் அறிமுகம் என்பவற்றை பேராசிரியர்
திரு நியாஸ் ( பல்கலைக்கழக விரிவுரையாளர் ) திறம்படச் செய்தது
சிறப்புக்குரியது.








0 Comments