Subscribe Us

header ads

முன்னால் ஜனாதிபதியை புகழ்ந்தும் இகழ்ந்தும்


அன்பு ஜனாதிபதி நீ
அசிங்க ஜனாதிபதி நீ
அற்புதங்களும் செய்தாய் நீ
அருவருப்புக்களையும் விதைத்தாய் நீ

பள்ளிகளில் சத்தமாக பாங்கு கேட்க
அனுமதியளித்ததும் உன் காலப்பகுதியில் தான்
பள்ளிகளை பகிரங்கமாக உடைக்க
அனுமதியளித்ததும் உன் காலப்பகுதியில் தான்

பயங்கரவாதி புலிகள் 
அழிக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்
பயங்கர கிரீஸ் மனிதர்கள்
உருவாக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்

வீதி அபிவிருத்திகள்
அதிகரிக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்
விலைவாசிகள்
அதிகரிக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்

அதிகமான அபிவிருத்திகள்
செய்யப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்
அதிகமான கடன்கள்
வாங்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்

வியாபார நிறுவனங்கள்
பல திறக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்
வியாபார நிறுவனங்கள்
பல உடைக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்


அதிக இன்பம்
அடைந்ததும் உன் காலப்பகுதியில் தான்
அதிக துன்பம்
அடைந்ததும் உன் காலப்பகுதியில் தான்

உடைமைகள் பல உதயமானதும்
உன் காலப்பகுதியில் தான்
ஊழல்கள் பல உதயமானதும்
உன் காலப்பகுதியில் தான்

கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை 
வழங்கியதும் உன் காலப்பகுதியில் தான்
கசினோ கலாச்சாரத்திற்கு அனுமதி 
வழங்கியதும் உன் காலப்பகுதியில் தான்

அன்பு ஜனாதிபதி என்றிருந்தாய்
அசிங்க ஜனாதிபதியானாய்
அற்புதங்கள் செய்யத்தவற வில்லை
அருவருப்புக்களையும் விதைக்க மறக்கவில்லை.

நன்றி மறக்கும் சமூகமல்ல 
நம் சமூகம்
நன்றி சொல்கிறோம்
நன்றாக ஆட்சி செய்ததற்கு

வெறுக்கிறோம்
வென்றமமதையில்
வெள்ளைக்காரனாய்
வெற்றாட்சி செய்தவுன்னை..



-கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்-



Post a Comment

0 Comments