Subscribe Us

header ads

அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு

அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.

அரசியல் ரீதியான காரணிகளுக்காக இராணுவ சேவையிலிருந்து கட்டாய அடிப்படையில் ஓய்வுறுத்தப்பட்ட 5 மேஜர் ஜெனரல்கள் உள்ளிட்ட 14 இராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த அதிகாரிகள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்டாய ரீதியாக ஓய்வுறுத்தப்பட்டிருந்தனர்.

ஐந்து பிரிகேடியர்கள், ஒரு கேர்ணல், ஒரு லெப்டினன் கேணல், இரண்டு கப்டன்கள் உள்ளிட்டோரும் இதில் அடங்குகின்றனர்.

இவ்வாறு அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சூரியபண்டார, அவுஸ்திரேலியாவிற்கு குடிப்பெயர்ந்து அங்கு மாரடைப்பினால் உயிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இராணுவ அதிகாரிகளிடமிருந்து பறிக்கப்பட்ட பட்டங்கள் பதவிகள் அனைத்தும் மீள அளிக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments