Subscribe Us

header ads

நாம் தோல்வியடைய வில்லை- முன்னாள் ஜனாதிபதி

நாம் தோல்வியடையவில்லை. வடக்கு, கிழக்கு மற்றும் தோட்ட பகுதியிலிருந்து வழங்கப்பட்ட வாக்குகளினால் தான் நாம் தோல்வியடைந்தோம். அது ஒரு பிரச்சினையில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள தனது இல்லத்துக்குச் சென்றபோது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக பி.பி.சி. சிங்கள சேவை  குறிப்பிட்டுள்ளது.
நீங்கள் ஹம்பாந்தொட்ட மாவட்டத்திலிருந்த வரலாறு காணாத வாக்குகளை எனக்கு அளித்துள்ளீர்கள். குறிப்பாக, முல்கிரிகல, பெலிஅத்த, தங்காலை, திஸ்ஸமஹாராம தொகுதிகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதற்காக நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுக்காக நான் எப்போதும் உள்ளேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments