Subscribe Us

மஹிந்த ராஜபக்சவுக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!

கொடிகாவத்த – முல்லேரியா முன்னாள் பிரதேச சபை தலைவர் பிரசன்ன சொலங்காராச்சியை கட்சியை விட்டு நீக்கியதற்கெதிராக அவரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் 26ம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயலாளர் அநுர யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரமு முன்னணி செயலாளர் சுசில்
பிறேமஜயந்த ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளருக்கு ஆதரவளித்த பெரும்பாலான உறுப்பினர்கள் அதிரடியாக கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments