Subscribe Us

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் பரவி வரும் திருமண பத்திரிக்கை அழைப்பிதழ் பொய்யானது.. !



சமிப காலமாகவே சங்பரிவார்கள் தனது அவதூறு பிரச்சாரத்ததை முகநூலில் வாயிலாக துவங்கி உள்ளது.. 

கடந்த வாரம் இஸ்லாமிய பெண்னை அவதூராக சித்தரித்து இந்து முன்னனி ஒரு இழிவு செயல் செய்தது, அதை தாங்கள் செய்யவில்லை என்று சாதித்தது கடைசியில் அந்த போஸ்டர் அடித்து இந்து முன்னனி பிரமுகர் மாட்டி கொண்டு தற்பேழுது சிறையில் உள்ளார்.. 

அதை தொடர்ந்து இந்த திருமண அழைப்பு செய்தியும் இபபோது பரவலாக பரவி வருகிறது

இது சம்மநதமாக ஜமுமுக மாநில மாணவரணி செயலாளர் அப்துல் காதர் அவர்கள் சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார்..

ஜமுமுக (JMMK)வுடைய மாநில மாணவரணி செயலாளர் அப்துல் காதர் அவர்களும் மற்றும் தெ.செ.மாவட்ட மாணவரணி செயலாளர் தமீம் இஸ்தியாக் (விசாரணை குழு ) அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் விசாரித்த போது
இந்த திருமண தகவல் பொய்யானது என்றும் ஹமீது சுல்தான் அவர்களுடைய மனைவி பெயர் பாரிஜான் என்றும் அவர்களுக்கு கதீஜா என்று திருமண வயதில் பெண் பிள்ளையே இல்லை என்பதை யும் மிக வருத்தத்துடன் கூறினார்கள். ஆக இது யாரோ இஸ்லாமிய பெண்களையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கோடும், இஸ்லாமியர்களை தூண்டிவிட செய்யும் வேலை என்பதையும் அவர்கள் சொன்ன தகவல் அடிப்படையில் தெரிகிறது. இது போன்று அவதூறு சொல்பவர்கள் பிடிப்பட்டால் கால்த்திற்கும் கம்பி எண்ண வேண்டி இருக்கும் எனவும், எந்த தகவலையும் பகிர்வதற்கு முன் அந்த தகவலை உறுதி படுத்திக்கொள்ளுமாறும் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறினார்கள்..

  இஸ்லாமியர்ளுக்கு வேண்டுக்கொள்..!

இப்படி இவர்கள் பரப்ப காரணம் என்ன என்று இஸ்லாமியர்கள் சிந்திக்க வேண்டும்.. மதவாதத்தை தூண்டியோ. இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று சொல்லியோ இவர்கள் ஒற்றுமையாக இந்து முஸ்லிம்கள் வாழும் தமிழகத்தில் கால் பதிக்க முடியவே முடியாது.. அதனால் இப்படி இஸ்லாமியர்களை உசுபேத்திவிட்டால் அவர்கள் வரம்பு மீறி இந்துதுவா என்றும் காவிகள் என்றும் வரம்பு மீறுவார்கள் அதை வைத்து ஆதயம் அடையலாம் என்று எண்ணி இப்படி ஒருகேடு கேட்ட செயல்களை செய்து வருகிறார்கள்..

இந்துத்துவா என்றால் அது இந்து என்ற வார்த்தை என்று ஒழிந்துள்ளதையும். காவி என்பது சாதரன இந்துக்கள் அணிய கூடிய ஒரு ஆடையாகவும் இருக்கிறது.. அது இந்தக்கள் அனைவரும் கூறிக்கிறது.. அதை பயண்படுத்திக் கொண்டு இந்த சங்கபரிவார்கள் 2016 தேர்தலுக்கு வழி வகுத்து வருகிறார்கள்.. 

இஸ்லாமிய சமுதாயமே..! கவனமாக இருங்கள்., இது மாதிரி இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தி போஸ்டர்களோ பத்திரிக்கைகளோ வந்தால் அல்லாஹ்க்காகவும் நம்முடைய தலைமுறைகளுக்காகவும் அமைதியாக இருங்கள்.. அதை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருங்கள்.. சங்பரிவா வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.. 

மதசார்ப்பற்ற இந்த நாட்டில் 90% இந்து மக்கள் நம்மோடு நாமாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துநடந்துக் கொள்ளுங்கள்..


நன்றி  : இந்திய முஸ்லிம் மீடியா

Post a Comment

0 Comments