Subscribe Us

header ads

ஜனாதிபதி மைத்திரி, பீரிஸ் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்யமாட்டார்:: அமைச்சரவையில் மாற்றம்!

அஸ்ரப் ஏ சமத்-
இன்று பி.பகல் புதிய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தற்போது கடமையில் உள்ள பிரதம நீதியரசர் மோகான் பீரிஸ் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்யமாட்டார்.
அவர் உயர் நீதியரசர் சி.சிறிபவன் முன்ணிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். எதிர்வரும் திங்கற் கிழமை பிரதம நீதியரசராக இருந்து ஜனாதிபதியால் வெளியேற்றப்பட்ட சிராணி பண்டாரநாயக்க மீள பிரதம நீதியரசராக புதிய ஜனாதிபதியினால் நியமிக்கப் பட உள்ளார். 
அத்துடன் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும். இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு செயலாளர் பதவியும் செயலிழக்கிறது. இந்நிலையிலேயே, புதிய பாதுகாப்பு செயலாளரும்,ஜனாதிபதி செயலாளரும் இன்று மாலையே பதவியேற்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments