பழையதை இழந்து
இழந்ததை மறந்து
புதியதை நினைத்து
புன்னகையோடு
காத்திருக்கும் ஒரு மனம்
இதுவரை போதும்
இனி தீர வேணும்
வருங்காலமாவது வாழ்வில்
வசந்தம் வேண்டும் என்று
எதிர் பார்த்திருக்கும்
ஒரு மனம்....
எது எப்படியோ!!!
எல்லோருக்கும் வாழ்க்கையில்
இன்பம் நிறைந்து
துன்பம் மறைந்து
வஞ்சம் இன்றி
வாழ்வு மலர்ந்து
நெஞ்சம் எல்லாம்
வேண்டுவது கிடைத்து
கண்கள் இரண்டும்
கண்ணீரை மறந்து
புன்னைகையோடு
வாழ்க்கை செழித்து
இனி வரும் காலம்
எல்லோருக்கும்
இன்பமாய் அமைந்திட
இந்த இனிய நாள் அதை
இதயம் கனிந்து வணங்கி
எல்லோருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....
KV நிருவாகம்


0 Comments