Subscribe Us

header ads

இஸ்லாமிய திருமண நிகழ்வுகளின் போது மாப்பிள்ளையை ரெக்கிங் பண்ணும் கலாச்சாரம்.

-Safwan Basheer-


முஸ்லிம் திருமண நிகழ்வுகளின் போது
மாப்பிள்ளையை ரெக் பண்ணும் ஒரு
கலாச்சாரம் பரவி வருகின்றது.

அதிகமான சந்தர்ப்பங்களில் இது நகைச்சுவை என்ற எல்லையைத் தான்டிச்
சென்று பல்வேறு வாய்த்தர்க்கங்களையும் மனக்கசப்புக்களையும் உருவாக்கிவிடுகின்றது.

திருமணம் நாள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான நாளாகும்.
அந்த நாளின் நினைவுகள் எப்பொழுதும் இனிமயானதாகவே இருக்க வேண்டும்.

இந்த ரெகிங்கில் ஈடுபடுபவர்கள் அநேகமாக மாப்பிள்ளையின் நெருங்கிய
நண்பர்களாகவே இருப்பார்கள்.
அவர்கள் நாகரிகமாக சில நகைச்சுவையான காரியங்களை செய்வதையோ கிண்டல் பண்ணுவதையோ
எல்லோரும் ரசிப்பார்கள். ஆனால் அது ஒரு அளவோடு
இருக்கும்வரை ஆரோக்யமாக இருக்கும்.
அது அளவுகடந்து செல்லும் போது பல
சிக்கலையும் மனக்கசப்புககளையும்
உருவாக்கி விடுகின்றது.

அப்படியான ஒரு நிலமை வரும்போது
மாப்பிள்ளை குறித்தும் அவரது நண்பரகள்
குறித்தும் ஒரு மோசமான பதிவை பெண்
வீட்டார் மத்தியில் ஏற்படுத்தி விடுகின்றது
இது சில தம்பதிகளின் திருமண வாழ்க்கையில் கூட பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றது.

எனவே இந்த ரெகிங் கலாச்சாரம்
குறிப்பிட்ட சில முஸ்லிம் ஊர்களில் கொஞ்சம் அதிகமாகவே பரவி வருவதை அவதானிக்க
முடிகிறது. இது எமது
சமூகத்துக்கு எந்தவகையிலும் பொருத்த
மற்ற ஒரு கலாச்சாரமாகும்.

இந்த அத்துமீரிய ரெகிங் கலாச்சாரத்தினால் ஏற்படும்
பாதிப்புக்களையும் அதன் பாரதூரங்களை
யும் தெரியாமல் அவற்றில் ஈடுபடும்
இளைஞரகளுக்கு சரியான அறிவூட்டல்
களை வழங்க வேண்டியது ஒவ்வொரு
ஊரிலுமுள்ள பொறுப்புள்ளவர்களின்
கடமையாகும்.

Post a Comment

0 Comments