Subscribe Us

header ads

// 'மாற்றம்' உண்மைப்படுத்தப்பட வேண்டும் \\

இன்று முதல் நான் தயாராகுவது, மைத்ரீக்கு ஆரவாரம் செய்வதற்கு அல்ல. இன்றைய தலைவன் மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிரகாரம் செயலாற்ற வேண்டும். கடந்த காலத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாத பூதங்களையும் கற்பனை உகங்களையும் காட்டாமல் செய்யக்கூடியதை சொல்ல வேண்டும், சொல்வதை செய்யவேண்டும்.

2010-லிருந்து ஜந்து வருடங்களுக்குள் (2015)-இல் சமூக வலைத்தளங்கள் பாரிய பாய்ச்சலை பாய்ந்துள்ளது. நவீன உலகில் ஒளிந்து மறைந்து செய்யக்கூடிய விடயங்கள் எதுவும் இல்லை. அனைத்தும் மக்களின் கைகளில் உள்ளது.

மைதிரீயின் அரசாங்கம் அடுத்த தேர்தலுக்குத் தயாராகுவது இந்நிலை மென்மேலும் முன்னேற்றமடையும் ஒரு காலப் பகுதியிலாகும். பைத்தியம் விளையாடுவதற்கு முன்னர் இதனை நூற்றுக்கு ஆயிரம்முறை யோசிக்க வேண்டும். தன் மீது நம்பிக்கை வைத்த வாக்காளனை பட்டிக்காட்டான் எனக் கருதினால் முடிவு நினைப்பதை விட மிக சீக்கிரம் வந்துசேர்ந்துவிடலாம். அதற்கு சிறந்த உதாரணம் மஹிந்தவுக்கு ஏற்பட்ட நாசமன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

தேர்தல் வெற்றியென்பது கிரீடம் அல்ல, அதுவொரு நன்னடத்தைச் சான்றிதழ். அதனை சரியான நடத்தைகளின் மூலம் மட்டுமே மென்மேலும் புடம்போட்டுக்கொள்ள முடியும்.

அரசியல் என்பது ஒரு தனிமனிதனோ அல்லது கட்சியோ அல்ல, அதுவொரு தத்துதவம். உண்மையான தலைவன் என்பவன் 'திறமையுள்ள முகாமையாளன்' ஆவான்.

ஒரு (சிங்களப்) பாடல் கூறுவது போல் - 'அரசன் என எமக்கு உணராத அரசன்!'
*இறுதியாக, எமது வாக்குரிமையைப் பாதுகாத்துக்கொடுத்த கௌரவத்துக்குரிய தேர்தல் ஆணையாளருக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்.

சிங்களத்தில்: அமல் பெரேரா
தமிழில் : HISHAM  PX

Post a Comment

0 Comments