M.FAIZAL ISMAIL
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியின் பங்காளிக் கட்சியாக SLMC இருக்குமேயானால் பொத்துவில் இளைஞர்கள் ஒன்றியத்தினூடாக கட்சிக்கு விடுக்கும் செய்தி
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு பலரும் குறிவைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் மாகாண சபை உறுப்பினர் A.M.ஜெமில் அவர்கள் பிரதானமானவர். SLMCக்கு முதலமைச்சர் கிடைக்குமேயானால் அப்பதவி கௌரவ உறுப்பினர் A.M.ஜெமிலுக்கு வழங்கப்படக்கூடாது என்பதில் பொத்துவில் இளைஞர் ஒன்றியமும், பெரும்பான்மையான பொத்துவில் மக்களும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள்.
ஏன் அவருக்கு வழங்கக்கூடாது என்பதற்கான காரணங்கள்:
1.இவர் கட்சிக்காக உண்மையாக நடந்த வரலாறு மிகக் குறைவான சந்தர்ப்பங்களே உள்ளன.
2.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தவர்.
3.முதலமைச்சர் பதவியினை தலைவருக்கு சவாலான முறையில் எடுப்பதற்கு பஷில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலேயே தவமாய் கிடந்தவர்.
4.கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்த போது இவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில்தான் சத்தியப்பிரமானம் செய்தவர்.
5.தலைவர் மாகாண சபையிலே அமைச்சுப் பதவி கொடுக்காததற்காய்(Mount Lavinia) பிரபல ஹோட்டல் ஒன்றில் போதையில் தலைவருக்கு கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்த வரலாறு இதன் Recording தலைவர் வசமும் உண்டு.
6.திவிநெகும சட்ட மூலத்துக்கு மு.கா. உறுப்பினர்களை பிழையாக வழி நடத்தியமை.
இவ்வாறு இவரைப் பற்றி அடிக்குக் கொண்டே செல்லலாம்.இவ்வாறான ஒருவருக்கு எவ்வாறு முதலமைச்சர் பதவி கொடுப்பது என்பதே எங்கள் வாதம், இருந்தும் இவ்வாறான விசுவாசிக்கே தலைமைத்துவம் முதலமைச்சர் பதவியினை வழங்க முன்வந்தால் தலைமைத்துவத்தின் முடிவினை ஏகமானதாக ஏற்றுக் கொள்வோம்.
எனினும் தலைமைத்துவத்தின் முடிவே எங்கள் முடிவு. (இன்ஷா அல்லாஹ்) விரைவில் இளைஞர் பிரகடனம் மூலம் இதனை வெளிப்படுத்த இருக்கின்றோம்.
எனினும் தலைமைத்துவத்தின் முடிவே எங்கள் முடிவு. (இன்ஷா அல்லாஹ்) விரைவில் இளைஞர் பிரகடனம் மூலம் இதனை வெளிப்படுத்த இருக்கின்றோம்.
A.R.M..பயாஸ்
பொத்துவில் சுயாதீன இளைஞர் ஒன்றியம்.
பொத்துவில் சுயாதீன இளைஞர் ஒன்றியம்.


0 Comments