– உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் -
நாட்டுக்கு நல்லாட்சி தேவை என்பதை அனைவரும் பேசுகின்ற தருணமிது. ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் நல்லாட்சி நம்மிடமே என்று கூறுகின்ற வேளையில் நல்லாட்சி பற்றிய எண்ணக் கருவின் பால் மக்களின் கவனத்தைத் திருப்பும் ஒரு முயற்சியே இதுவாகும்.
நல்லாட்சியின் அடையாளங்கள்:
நல்லாட்சி என்பது ‘நல்லாட்சி’ என்று முழங்குவதல்ல. மாறாக, ஆரவாரமின்றி நாட்டை அமைதி வழியில் இட்டுச் செல்கின்ற உன்னதமான விழுமியங்களின் ஆட்சியே நல்லாட்சியாகும். இந்த விழுமியங்கள் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுவதன் மூலம் நல்லாட்சியை அடையாளப்படுத்துகின்றன.

விழுமியம் 1: ஆட்சிக் குழுமத்தோடு தொடர்பானது:
ஆட்சிக் குழுமத்தில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர்.
ஆட்சிக் குழுமத்தில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர்.
இவர்களைத் தெரிவு செய்வதற்காக மக்கள் வாக்களிக்கும் ஜனநாயக முறைமை மட்டும் நல்லாட்சியின் குறி காட்டியல்ல. மாறாக, மக்கள் தெரிவுக்காக முன்மொழியப்படுகின்ற (Nominated) வேட்பாளர்கள் ஓர் ஒழுக்கக் கோவையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படல் வேண்டும். அதன் பின்னரே வாக்குக் கேற்பதற்காக அவர்கள் மக்கள் முன் செல்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும். இது நல்லாட்சிக்கான துவக்கப் புள்ளியாகும்.
அடுத்து, மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை வழிநடத்துகின்ற தலைவர் ஏனையவர்களோடு கலந்தாலோசனை செய்பவராகவும் நிபுணத்துவங்களை வரவேற்பவராகவும் பொறுப்புக்களை உரியவர்களிடம் பகிர்ந்தளித்து செயற்படுபவராகவும் திகழ வேண்டும். தன்னை விட மற்றோருவர் மேலே வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் இந்த விழுமியங்களுக்கு தடையாக அமைந்துவிடாது அவர் கருத்தாக செயற்பட வேண்டும்.

தன்னைவிட மற்றுமொருவர் தனது திறமைகளால் முன்சென்று விடுவார் என்ற அச்சம் ஒரு தலைவரை ஆட்கொண்டு விட்டால் ஆட்சிக் குழுமத்தினுள்ளேயே நல்லாட்சி அடக்கம் செய்யப்பட்டு விடுகின்றது. அங்கு கலந்தாலோசனைக்கோ, நிபுணத்துவத்தை மதிப்பதற்கோ, இடமே இருக்காது.
ஆட்சிக் குழுமத்தோடு தொடர்பான இந்த விழுமியங்களில் ஆட்சிக்கு வரும் ஒவ்வோர் அரசும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
விழுமியம் 2: அதிகாரத்தோடு தொடர்பானது
அதிகாரம் என்பது ஆட்சியாளர்கள் அனுபவிக்கும் ஒரு சொத்து அல்ல. அது பதில் கூறக் கடமைப்பட்ட மகத்தான ஒரு பொறுப்பு. அதனைப் பயன்படுத்தி பாரிய சாதனைகளை ஈட்டலாம் அல்லது துஷ்பிரயோகம் செய்வதனூடாக நாட்டையும் மக்களையும் சோதனைகளிலும் ஆழ்த்தலாம் என்பதை அதிகாரிகள் உணர்ந்திருக்க வேண்டும்.

நல்லாட்சி நடைபெற வேண்டுமாயின் அதிகாரம் சட்டத்தின் பிடிக்குள் வைக்கப்பட வேண்டும். சட்டத்தை மீறும் வகையில் அல்லது மேலேறித் தாண்டும் வகையில் அதிகாரம் செயற்படும் சூழலைத் தடை செய்ய வேண்டும். நாட்டின் அமைப்புச் சட்டத்தில் இதற்கான ஏற்பாடுகளும் வரைபுகளும் தெளிவாக வரையப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் “வலுவேராக்கம்” என்ற கோட்பாடு கண்டிப்பாக அமுல் செய்யப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக நீதித்துறை சுதந்திரமாக செயற்படுவதற்கான ஏற்பாட்டை அமைப்புச் சட்டத்தின் மூலம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், சட்டத்தின் ஆட்சி நாட்டில் நடைபெற வேண்டும். அதிகாரத்தின் ஆட்சியல்ல. சட்டம் அதிகாரிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, அதிகாரிகள் சட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற நிலை தோற்றம் பெறக் கூடாது. அப்போது மட்டுமே ஒரு நாட்டில் நீதி நிலைநாட்டப்படுகிறது. நீதி நிலைநாட்டப்பட்டால் அந்த ஆட்சியை நீடிப்பதற்கு அல்லாஹ்வும் உதவி செய்வான். அது முஸ்லிம் அல்லாதவர்களது ஆட்சியாக இருப்பினும் சரியே என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
சட்டத்தின் ஆட்சிக்கு மற்றுமொரு பரிமாணமும் இருக்கிறது. சில குற்றவாளிகளைத் தண்டித்து மற்றும் சில குற்றவாளிகளைக் கண்டும் காணாதிருப்பது சட்டத்தின் ஆட்சியல்ல. தனக்கு சார்பானவர்களை மறைத்து எதிரானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் சட்டத்தின் ஆட்சியல்ல. மாறாக, (அநீதியிழைக்கப்பட்ட) பலவீனர்களை பாதுகாத்து பலப்படுத்துவதும் (அநீதியிழைத்த) பலவான்களைத் தண்டித்து பலவீனப்படுத்துவதும்தான் சட்டத்தின் ஆட்சி என்பதை நாடு புரிந்து கொள்ளும் வகையில் சட்டம் அமுல் செய்யப்பட்டால் மட்டுமே அங்கு நல்லாட்சி நிலவுகின்றது என அர்த்தம்.
நடைபெறப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் அதிகம் பேசப்படுகின்ற பேசு பொருள் “அதிகாரம்” பற்றியதாகவே இருக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிகாரம் எங்கே வைக்கப்பட வேண்டும், சட்டம் எங்கே வைக்கப்பட வேண்டும் என்பதை சரியாக வரையறை செய்யாவிட்டால் நல்லாட்சி குதிரைக் கொம்பாகவே இருக்கும்.

அதிகாரம் தொடர்பான விழுமியங்கள் ஆட்சியாளர்களது கவனத்தையும் விசுவாசத்தையும் பெறாத விடத்து சட்டத்தின் ஆட்சி மலரப் போவதில்லை.
விழுமியம் 3: பாதுகாப்புடன் தொடர்பானது
ஒரு நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது எனின் அங்கே நான்கு அம்சங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். இவற்றுள் ஒன்று, நீக்கப்படவேண்டியது. ஏனையவை, நிலைநிறுத்தப்பட வேண்டியவை.
ஒரு நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது எனின் அங்கே நான்கு அம்சங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். இவற்றுள் ஒன்று, நீக்கப்படவேண்டியது. ஏனையவை, நிலைநிறுத்தப்பட வேண்டியவை.
அ) நீக்கப்பட வேண்டியதை முதலில் பார்ப்போம்…
நாட்டை அச்சுறுத்தும் பயங்கரவாதம் எந்த வடிவில் தோன்றினாலும் அதன் தீங்கிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது நல்லாட்சிக்கு இன்றியமையாதது. எமது நாட்டை 3 தசாப்தங்களாக அச்சுறுத்திய பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது. அந்த வகையில் நல்லாட்சியை நோக்கிய பயணத்தின் ஒரு மைற்கல் என்றே அதனைக் கூற வேண்டும். எனினும் இனங்களுக்கெதிரான பயங்கரவாதம் இல்லாமலாக்கப்பட்டு மதங்களுக்கெதிரான பயங்கரவாம் தோற்றம் பெற்றது.

ஆ) சிறுபான்மை சமூகங்களுக்கான பாதுகாப்பு நல்லாட்சியின் மற்றுமோர் அடையாளமாகும். காரணம், சிறுபான்மை சமூகங்கள் ஆளப்படுகின்ற சமூகங்களாகவும் பெரும்பான்மை சமூகங்கள் ஆளும் சமூகங்களாகவும் இருக்கின்றன. அநீதி பொதுவாக ஆளப்படும் சமூகங்களுக்கே இழைக்கப்படுகின்றது. ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுகிறது எனின் அதனை அங்குள்ள சிறுபான்மை சமூகங்களின் வாழ்வில் காணலாம். சிறுபான்மை சமூகங்களோடு இந்நோக்கத்தில் ஒப்பந்தங்கள் செய்யுமளவு 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாமிய ஆட்சியாளர்கள் முன்னேறியிருந்தார்கள் என்பது வரலாறு.
இ) மதங்களுக்கான பாதுகாப்பு நல்லாட்சியின் மற்றுமோர் அடையாளமாகும். எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மத ரீதியான அச்சுறுத்தல்கள்நிகழா வண்ணம் இந்தப் பாதுகாப்பு நல்லாட்சியில் உத்தரவாதப்படுத்தப் பட்டிருக்கும். இஸ்லாமிய ஆட்சியில் இந்தப் பொறுப்பை பாதுகாப்புப் படை ஏற்றிருக்கும் என அல்குர்ஆன் கூறுகின்றது. “மனிதர்களில் (அநீதியிழைக்கின்ற) சிலரை (பாதுகாக்கும்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்கா விட்டால் யூதர்களதும் கிறிஸ்தவர்களதும் துறவிகளினதும் ஆலயங்கள் மற்றும் அல்லாஹ்வை நினைவுகூறும் மஸ்ஜித்கள் என்பன தகர்க்கப்பட்டு விடும்…”
இஸ்லாம் கூறும் நல்லாட்சியில் அனைத்து மதங்களுக்கும் பாதுகாப்புண்டு என்பதையே இந்த வசனம் குறிப்பிடுகிறது.
ஈ) மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு நல்லாட்சியின் மற்றுமோர் அடையாளமாகும். மத, குல, நிற, மொழி வேறுபாடுகளுக்கப்பால் மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு ஜீவனுக்கும் வாழும் உரிமை முதல் சகல உரிமைகளும் வழங்கப்படுவதற்கான உத்தரவாதத்தையே இது குறிக்கின்றது. உரிமைகளை இழக்கும் மனிதன் தனது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை உணருகின்றான்.

சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட உரிமைகளை அனுபவித்து சுதந்திரமாக பேசவோ, எழுதவோ, நடமாடவோ, கருமமாற்றவோ, குறைந்த பட்சம் வாழவோ முடியாத ஓர் உணர்வு அவனை ஆட்கொள்கின்ற போது தனது மனித அந்தஸ்தை இழப்பதுபோன்று அவன் அவஸ்த்தைக்குள்ளாகின்றான். சுதந்திரமின்றி அடைத்து வைக்கப்படுகின்றவை மிருகங்களே. எனினும் அவற்றுக்குள்ள பாதுகாப்புக் கூட தனக்கில்லை என்று ஒரு மனிதன் உணருகின்ற போது அந்த சூழலில் நல்லாட்சி நிலவுவதாக எப்படிக் கூற முடியும்?
விழுமியம் 4: வளங்கள் தொடர்பானது
நல்லாட்சியின் குறிகாட்டிகளில் மற்றுமொன்று நாட்டின் வளங்களை பாதுகாத்து, விருத்தி செய்து, பயன்படுத்தி, மேன்மைப்படுத்தலாகும். மனித, பௌதிக வளங்கள் என பொதுவாக இந்த வளங்கள் அடையாளப் படுத்தப்படுகின்றன.
நல்லாட்சியின் குறிகாட்டிகளில் மற்றுமொன்று நாட்டின் வளங்களை பாதுகாத்து, விருத்தி செய்து, பயன்படுத்தி, மேன்மைப்படுத்தலாகும். மனித, பௌதிக வளங்கள் என பொதுவாக இந்த வளங்கள் அடையாளப் படுத்தப்படுகின்றன.
அ) மனித வளங்கள்: மனித வளங்களை விருத்தி செய்வதில் பெரும் பங்கு கல்விக்கும் வெவ்வேறு அளவிலான பங்குகள் வியாபாரம், தொழில் துறைகள் மற்றும் கலை, கலாசாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற துறைகளுக்கும் இருக்கின்றன. இந்தத் துறைகள் ஒவ்வொன்றுடனும் நவீன தொழில்நுட்பங்கள் இணைக்கப்படுகின்ற போது மனித வளங்களை விருத்தி செய்வது இலகுவாகின்றது.
அதேநேரம் மனிதவளம், குறிப்பாக இளைஞர் வளம், விரயமாக்கப்படுவதற்கு இடம் தராத ஒரு பொறிமுறை நாடு தழுவிய அமைப்பில் உருவாக்கப்படுதல் நல்லாட்சி புரிவோரின் தலையாய கடமைகளுள் ஒன்றாகும். இந்த நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தியையே நாட்டின் பிரதான அபிவிருத்தி எனலாம்.

ஆ) ஏனைய வளங்கள்: மனிதவளம் தவிர்ந்த ஏனைய வளங்களை நான்கு தலைப்புகளில் நோக்கலாம்.
1. இயற்கை வளங்கள்: நீர், நிலம், காடு என்பவற்றுடன் இயற்கையின் அழகையும் பசுமையும் பராமரித்து விருத்தி செய்தல் இதில் அடக்கப்படுகின்றது. இதன் மூலம் சூழல் பாதுகாப்பு உத்தரவாதப் படுத்தப்படுகின்றது. சுத்தமான நீர், காற்று, சுகாதாரம், சுற்றுச் சூழல் என்பவற்றை மனிதர்கள் உட்பட ஏனைய உயிரினங்கள் பெறுகின்றன. ஆரோக்கியமான வாழ்வு இதனால் உறுதி செய்யப்படுகின்றது. நில, நீர் வளங்கள் மேன்மைப்படுத்தப்படுவதனால் விவசாயமும் விவசாய உற்பத்திகளும் அதிகரிக்கின்றன. அதனால் வாழ்க்கைச் செலவும் குறைகின்றது. மக்கள் உழைப்பின் உரிய பலனை அனுபவிக்க முடிகிறது. இதுவெல்லாம் நல்லாட்சியின் பிரதிபலன்களே.

2. உட்கட்டமைப்பு வசதிகள்: இயற்கை அழகுபடுத்தலோடு இணைந்து செல்லும் ஒரு அபிவிருத்தியாகவும் மனிதர்களது உழைப்புகளை இலகுபடுத்தி தேவைகளை நிறைவு செய்து தரும் அபிவிருத்தியாகவும் உட்கட்டமைப்பு வசதிகள் காணப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் மனித வாழ்க்கையை இலகுபடுத்தும் நோக்கிலேயே உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் எந்தவோர் இடத்திலும் அசௌகரியத்தை உணராத வகையில் இந்த வசதிகள் மேம்படுத்தப்படல் வேண்டும்.
3. நிர்வாகப் பொறிமுறை: நிர்வாகப் பொறிமுறையும் ஒரு வளமாகவே கொள்ளப்பட வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகள் போன்று நாட்டின் இயக்கத்தை சீராக்கி இலகுபடுத்தும் ஒரு பணியையே நிர்வாகப் பொறிமுறை ஆற்றுகின்றது. நிர்வாகப் பொறிமுறை நவீன தொழில் நுட்பங்களோடு விருத்தி செய்யப்படுவதோடு நிர்வாகிகளிடம் கடமையுணர்வு, சேவை மனப்பான்மை, எமது நாட்டின் புகழை மேலோங்கச் செய்வதற்காக உழைக்கின்றோம் என்பன போன்ற மனப்பாங்குகள் விருத்தி செய்யப்படல் வேண்டும்.
பொதுச் சொத்துக்களது துஷ்பிரயோகம், மக்களை அலைக்கழிய வைத்தல், மக்களை அறிவூட்டாதிருத்தல், கடமைகளை நிறைவேற்றாது காலம் தாழ்த்துதல், இலஞ்சம், நிர்வாக ஊழல் மோசடிகளுக்கு அடிமையாகுதல் போன்ற சீர்கேடுகளை நிர்வாகத் துறையிலிருந்து முற்றாகக் களைய வேண்டும்.

4. நிதி: நாட்டின் வருமானம் மற்றும் செலவினங்கள், அந்நிய நாட்டுச் செலாவணி, முதலீடுகள், கடன்கள், அபிவிருத்தி உடன்படிக்கைகள் போன்ற அனைத்திலும் தூய்மை, வெளிப்படைத் தன்மை, வகை கூறுதல் என்பவற்றை உறுதி செய்ய வேண்டும். வளங்கள் அனைத்திலும் அதிகம் விரயமாகின்ற ஊழல் மோசடிகளுக்குட்படுகின்ற, துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற ஒரு வளமாக நிதி வளமே காணப்படுகின்றது.
ஐரோப்பாவின் நோயாளியாக இருந்த துருக்கியை பத்து வருடங்களில் ஐரோப்பாவின் அதிசயமாக மாற்றியமைத்து சகல துறைகளிலும் முன்னேறிய ஒரு கடனில்லாத தேசமாக எவ்வாறு மாற்றினீர்கள்? என அந்நாட்டு பிரதமர் தையிப் அர்துகானிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் அவர் கூறிய பதில், “நான் களவெடுக்கவில்லை” என்பது மட்டுமே.
நிதி வளத்தை சரியாக நிர்வகித்தால் எந்தத் தேசத்தையும் அதிசயமிக்கதாக மாற்றியமைக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டே அந்தப் பதில்.
இவ்வாறு நாட்டின் வளங்களைப் பாதுகாத்து, விருத்தி செய்யும் வகையில் ஓர் ஆட்சி தேவை என்பதை மக்கள் முன்னெப்போதுமில்லாத அளவு உணர்ந்து பேசியும் வருகின்ற ஒரு தருணத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேச்சை செயலாக மாற்றுவது எப்படி என்ற வினாவுக்கே அரசியல் தலைவர்கள் விடை கூற வேண்டும்.

விழுமியம் 5: வாழ்க்கை முறை தொடர்பானது:
நல்லாட்சியின் விசேட குறி காட்டிகளில் ஒன்று மக்களின் பிரதான வாழ்க்கை முறையாகும். ஏற்கனவே நாம் கண்ட நல்லாட்சியின் குறியீடுகள் அல்லது அடையாளங்கள் ஒரு நாட்டில் இருந்த போதிலும் கூட இந்த இறுதிக் குறியீடு பிழையான திசையைக் காட்டினால் நல்லாட்சி அங்கு முழுமை பெற்றதாகக் கூற முடியாது.

மக்களது வாழ்க்கை முறை பல்வேறு சீர்கேடுகள் சூழப் பெற்றதாக இன்று மாறியிருக்கின்றது. அமைதியின்மை, பயம், சந்தேகம், பதட்டம், மன அழுத்தம், வாழ்க்கையில் பிடிப்பின்மை, அவநம்பிக்கை, அதிருப்தி, தோல்வி மனப்பான்மை, தாழ்வுச் சிக்கல், அன்பு, அந்நியோன்யம், குடும்பப் பிணைப்பு என்பவற்றில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, மது, சூது, போதைவஸ்துப் பாவனைகள், ஒழுக்க வீழ்ச்சி, கொலை,கொள்ளைகள், ஆட்கடத்தல், கப்பம் கோருதல், மதவெறி, இனவெறி, வன்முறைக் கலாசாரம், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என இந்த சீர்கேடுகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
நல்லாட்சி என்பது மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும் பொழுதுபோக்குகளையும் ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமல்ல. மாறாக, அவர்கள் நன்மைகள் நிறைந்த, தீமைகள் குறைந்த ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு வழி செய்வதே நல்லாட்சியாகும்.
மக்களை நல்வாழ்வு வாழச் செய்வது அரசின் வேலையல்ல. அது மத போதகர்களின் வேலை என்ற கருத்தே இது விடயத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. உண்மையில் இதனை இரு சாராரும் இணைந்து திட்டமிட்டுச் செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் இது விடயத்தில் துணையாக இருக்க வேண்டும். மது, சூது என்பவற்றுக்கு அரசு அங்கீகாரம் வழங்கினால் மத போதகர் செய்யும் உபதேசங்களால் என்ன பலன் விளையப் போகிறது?
இனவாதத்தையும் மதவெறியையும் அரசாங்கம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தால் மத போதகர்கள் வேத மோதி என்ன பயன் ஏற்படப் போகின்றது? எனவே, சீரான வாழ்க்கை முறையொன்றின் பால் மக்களை இட்டுச் செல்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. அதனை இன்று அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்.
மக்களின் இயல்பு எப்போதும் நல்லவற்றிற்கு சார்பாகவே இருக்கும். அதனைப் பலவந்தமாக அல்லது ஆசை காட்டி அல்லது பயமுறுத்தித்தான் கெட்டவையின் பக்கம் அழைத்துச் செல்ல முடியும். அவ்வாறு செய்தாலும் அது நிலைத்திருப்பதில்லை. கெட்டவனும் கூட விரும்பும்போது நல்லதையே விரும்புன்கிறான். அதனால் ‘மக்களின் விருப்பம்’ என்பது ஓர் அளப்பரிய சக்தி. அந்த சக்திக்கு முன்னால் தவறிழைப்பது இலேசல்ல. அந்த சக்தி ஒரு நாள் அதனைத் தட்டிக் கேட்கவே செய்யும்.
சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் தமது சமூகத்தின் உரிமைகள் குறித்துப் பேசும் தருணமல்ல இது. உரிமைப் போராட்டங்களையும் பேரம் பேசல்களையும் மூட்டை கட்டி ஒரு புறம் வைத்து விட்டு, நாட்டிற்கு நல்லாட்சி வேண்டும் என்பதை பேச வேண்டிய தருணமே இது. அவர்கள் ஆளும் தரப்பினரோடு பேசினாலும் எதிர்த்தரப்பினரோடு பேசினாலும் நாளை மலரப் போகும் ஆட்சி பற்றியே பேச வேண்டும். பின்னர் அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளை அல்லது சாராம்சத்தை மக்களுக்கு முன்னால் தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் தமது வாக்குகளால் இறுதி முடிவை எடுப்பார்கள்.
குறிப்பிட்ட காலம் தனிக் கோட்டில் பயணம் செய்த நாடு இப்போது தெளிவானதொரு பிரிகோட்டில் வந்து நிற்கிறது. அந்தப் பிரிகோட்டுச் சந்தியில் எந்தப் பக்கம் நாடு செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அரியதொரு சந்தர்ப்பம் இப்போது மக்களுக்கு கிடைத்திருக்கின்றது. இது மக்களுக்கான நேரம். மக்கள் தீர்மானிக்கும் பாதையில் நாடு இனி செல்லப் போகிறது. அது பிரிகோட்டில் எந்தப் பக்கம் சென்றாலும் ‘நல்லாட்சி’ என்ற இலக்கை நோக்கி நகர வேண்டும் என்பதே எமது அவா. அத்தகைய நல்லாட்சிக்குரிய அடையாளங்களையே இந்தப் பந்தியில் பதிவு செய்துள்ளோம்.
வரப்போகின்ற ஆட்சி மனிதர்களின் ஆட்சியாகவன்றி சட்டத்தின் ஆட்சியாகவும் விழுமியங்களின் ஆட்சியாகவும் அமைவதற்கு எமது பிரார்த்தனைகள்.
வரப்போகின்ற ஆட்சி மனிதர்களின் ஆட்சியாகவன்றி சட்டத்தின் ஆட்சியாகவும் விழுமியங்களின் ஆட்சியாகவும் அமைவதற்கு எமது பிரார்த்தனைகள்.

0 Comments