அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் கடும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்துசெய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியிலும், கனடாவின் சில பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு வீசும் எனவும் குறிப்பாக நியூயார்க், நியூ ஜெர்சி, மற்றும் கன்னெக்டிகட் போன்ற இடங்களில் பனிப்புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும் 90 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், நியூயார்க் நகருக்குச் செல்லும் 700 விமானங்கள் உள்பட சுமார் 2700 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.


0 Comments