Subscribe Us

header ads

புதிய ஹஜ் முகவர்கள் நிர்வாகம்

(அஸ்ரப் ஏ சமத்)
புதிய அரசாங்கத்தில் ஆட்சியமைத்தும் 2 கிழமையாகின்றன. இந்த அரசாங்கம் முஸ்லீம் காலாச்சாரத்தினை கவணிப்பதற்காக ஒரு கபிணட் முஸ்லீம் அமைச்சர் ஒருவரையும் செயலாளர் ஒருவரையும் நியமித்துள்ளது.
தபால் மற்றும் முஸ்லீம் சமய விவகார அமைச்சராக ஹலீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவ் அமைச்சின் செயலாளரும் ஒரு முஸ்லீமாக சிரேஸ்ட இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த ஜனாப் மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஹஜ்பற்றி தீர்மாணம் எடுப்பதற்கும் பௌத்த சாசன அமைச்சரே அவரது செயலாளருமே தீர்மாணம் எடுத்தனர். இதனால் பல்வேறு மதசம்பந்தமான விடயங்களில் முஸ்லீம்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டன.
ஒரு சமயத்தில் முஸ்லீம் அல்லாத ஒருவரை சவுதி அரேபியாவுக்கு தூதுவராகவும் மகிந்த ராஜபக்ச நியமித்திருந்தார். அவரை ஏற்றுக்கொள்ளாமல் சவுதி அரசு மீள திருப்பியனுப்பியது.

ஹஜ்விடயங்கள் பற்றி கவணிப்பதற்காக முன்னாள் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியை வேறு சில அரசியல் வாதிகளையும் இணைத்தலைமைகளையும் மகிந்த ராஜபக்ச நியமித்தார்.
அத்துடன் ஹஜ் விடயங்கள் பங்கீடுகள் மற்றும் விடயங்களில் நீதியை வேண்டி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றமை முஸ்லீம்களுக்கு பொறுக்க முடியாத ஒரு விடயமாக கடந்த காலத்தில் இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் இருந்து வந்த ஹஜ் முகவர்கள் கலைக்கப்பட்டு தற்பொழுது ஒரு புதிய நிர்வாகமொன்று தெரிபு செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் அல்தாப் நவாஸ் தெரிவித்தார்.
அகில இலங்கை ஹஜ் பிரயாண இயக்குணர் சங்கம் இன்று காலை கொழும்பு பெண்கள் கல்வி ஆராய்ச்சி நிலையத்தில் கூடியுள்ளது. பின்வருவோர் நிருவாக உறுப்பிணர்களாக தெரிபு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவராக அல்ஹாஜ் ஏ.எல்.எம் கலீல் மொளலவி,
உப தலைவர்களாக – எஸ்.எச்.முஹமட்,
எஸ்.எச். அலியார்
செயலாளர் – எம். அல்த்தாப் நவாஸ்
உதவிச் செயலாளர் – எம்.ஆர்.எம் நைசர்
பொருளாளர் – ஏ.பி.எம். நுஹ்மான்
உதவிப் பொருளாளர் – எம்.எம். எம். முல்தாசிம்
நிருவாக உறுப்பிணர்கள்
மௌலவி- எம்.ஜ.எம். ஹூசைனடீன், எம்.ஜே.எம். ஹூசைன், பி.எம்.எம். நஜீம், எஸ்.எச் இமாடீன், மௌலவி எம்.எச்.எம். சுபைர், எம்.எஸ்.எப். ஆர். முஹத்திஸ், எம். ஜ.எம். பாசிம், மௌலவி எம்.ஜே.எம். ஹூசைன்.

Post a Comment

0 Comments