Subscribe Us

யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வந்ததால் மகிந்தைக்கு நாட்டை சொந்தம் கொண்டாட முடியாது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன்.
(எஸ்.எல்.எம்.றாபி)

முப்பது வருட காலம் கரையோடிப் போயிருந்த யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்ததால் நாட்டை சொந்தம் கொண்டாட முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார். நேற்றைய தினம் (19) நிந்தவூரில் இடம்பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில் :

ஜனாதிபதி அவர்களின் இந்த வெற்றி கொண்டாடக் கூடியதும், எமது மனங்களில் இருந்து அகல முடியாததுமான வெற்றியாகும். ஏனென்றால் நாம் எல்லோரும் சுனாமி அலைகள் போன்று அலைதிரண்டு ஒட்டு மொத்தமாக மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களித்தோம்.

இதனால் நாம் எல்லோரும்  அவரின் ஆட்சியின் முக்கிய பங்கினை வகித்துக் கொண்டிருக்கிறோம்.

அரசியல் வாதிகளுக்கும், அரசியல் தலைமைகளுக்கும் மக்கள் இல்லை மக்களுக்காகத்தான் தலைமைகள் இயங்க வேண்டும் என்பதனை நன்றாக தெளிவுபடுத்திய அரசாட்சியை நாம் தெரிவு செய்துள்ளோம். ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து எமது நாட்டின் வளங்களை உறுஞ்சிக் கொண்டு அட்டைகள் போன்று இருந்து எமது வாழ்கைச்செலவினை அதிகரித்துக் கொண்டிருந்த எம்மை பட்டினிச்சாவை  நோக்கி தள்ளக்கூடிய ஒரு ஆட்சியை தள்ளிவிட்டு எல்லோரிற்கும் சம உரிமை. ஒரு இனம் இன்னொரு இனத்தினை ஆழ  முடியாது. எல்லா இனங்களும் சம உரிமையோடு வாழவேண்டும் என்கின்ற விடயங்களை அடிப்படையாக என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு அரசாட்சியை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம்.

எமது வாழ் நாள் முழுக்க இந்த வெற்றியை நினைத்துப் பார்க்க வேண்டும், இந்த மாற்றத்தினை ஏற்படுத்தியதனால் எமது எதிர்கால சந்ததியினரிற்கு எத்தகைய மாற்றத்தினைஏற்படுத்தியிருக்கின்றோம். அவர்களுக்கு எதனை  நாங்கள் விட்டு வைத்து செல்ல இருக்கின்றோம் என்கின்ற விடயங்களினை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

சர்வாதிகார ஆட்சி இனங்களுக்கிடையே முருகல்களை தோற்றுவித்து பொது பலசேனா என்கின்றஇயக்கத்தினை உருவாக்கி அதனை இரண்டு வருடங்களுக்குள் அசூர வளர்ச்சியடையச் செய்த  இந்த ஆட்சி மூலமாக  சிங்கள மக்களின் வாக்குகளை தாங்கள் தொடர்ந்தும் அனுபவிக்க வேண்டும், சிங்கள மக்கள் ஒரு குடும்பத்தை தவிர வேறு எவரிற்கும் வாக்களிக்கக் கூடாது, சிறுபான்மையினரின் வாக்குகளை புறந்தள்ளிவிட்டு அவர்களை அடக்கி ஆளுவதன் மூலம் பெரும்பான்மை இயக்கங்களை தோற்றுவித்து அதன் மூலம் சிறுபான்மையினரை அச்சத்திற்குள் உட்படுத்தி பெரும்பான்மை ஆட்சியை நிறுவலாம் என்கின்ற கனவுகள் காணப்பட்டது. அவையெல்லாம் இப்போது முடிவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் எல்லோரும் பெரும்பான்மை சமூகத்தை பாராட்ட வேண்டும். ஏனென்றால் சிங்கள பிரதேசங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் வெற்றி பெற்றிந்தாலும் அவர் எதிர்பார்த்த  பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை.

சிங்களவர்கள் 2010இல் கொடுத்த பெரும்பான்மை வாக்குகள் இம்முறை அவர்களால் கொடுக்கப்படவில்லை. பொது பலசேனா எந்த நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டதோ  அந்த நோக்கம் சிங்கள மக்களின் பெருந்தன்மையினால் எல்லா இனக் குடும்பங்களும் சரி சமமானது   என்கின்ற அபிப்பிராயத்தின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன அவர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக்கொண்டு சிங்கள மக்கள் மைத்திரிபால அவர்களுக்கு வாக்களித்தார்கள். நடந்தேறிய ஜனாதிபதித் தேர்தலில் எமது தலைமைத்துவங்கள் முடிவெடுக்க தாமதித்தாலும், எமது சமூகம் தீர்க்கமான முடிவினை எடுத்திருந்தது என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த அராஜக ஆட்சிக்கு அடிபணிய மாட்டோம், ஜனநாயக  விரோத சக்திகளுக்கு நாம் அடிய மாட்டோம், நாட்டிலும் பிரதேசத்திலும்  ஜனநாயகம் உருவாக்கப் படவேண்டும், ஊழல் அற்ற ஆட்சி அமையப் பெறவேண்டும். சுயாதீன குழுக்கள் அமையப்பெற வேண்டும், பொலிஸ் நிர்வாகம் சுயாதீனமாக இடம்பெற வேண்டும் , நீதி நிர்வாகம் சுயாதீனமாக இடம்பெற வேண்டும் பாராளுமன்றதிற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும், ஒரு குடும்பத்திடம் அல்லது ஒரு தனி நபரிடம் அதிகாரங்கள் குவிக்கப்படக்கூடாது  என்கின்ற மனத்துணிவோடு அவர்கள் காணப்பட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் எதனை நாம் அனுபவித்துக் கொண்டிருந்தோம்? இந்நாட்டில் வெளிப்படையான ஒப்பந்தங்கள் ஏதாவது நடைபெற்றனவா? ஆனால் வெளிப்படையான ஊழல் மிக்க ஒரு ஆட்சியினையே நாம் அனுபவித்துக் கொண்டிருந்தோம். எனவே  இவையெல்லாம் களையப்பட்டு மக்களுக்குப் பொறுப்புக் கூறும் தலைமைத்துவத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு விழாக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை தனிநபர் வகிபாடு என்கின்ற கொள்கைப் பிரகடனத்துடன் இருந்திருந்தார். 

நாடு அவரிற்கு சொந்தம், அவர் நாட்டிற்கு சொந்தம் என்கின்ற நிலைமைகளை நாம் கண்டு கொண்டிருந்தோம். அவர் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்தது உண்மையாக இருக்கலாம், ஆனால் அவர் அதற்காக நாட்டினை சொந்தம் கொண்டாட முடியாது !

அவரிற்கு நாடு ஒரு பொது சேவகம் புரிய முடியாது. ஒரு முறை ஆட்சி வழங்கப்பட்ட போது தமிழ் மக்களுக்கும் அவர்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று நாம் விரும்பியிருந்தோம். தமிழ் மக்கள் 30 வருடங்கள் இரத்தம் சிந்தியமைக்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கும் ,  முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் சிறுபான்மை  சமூகம் மதிக்கப்படவேண்டும் அவர்களின் இனம் ஒற்றுமையாக வாழ வேண்டும் அதற்கான சூழலை முன்னாள் ஜனாதிபதி  ஏற்படுத்துவார்கள் என்ற ஒரே ஒரு நம்பிக்கையில் 2010ம் ஆண்டு அவரிற்கு வாக்களித்தோம். ஆனால் என்ன நடந்தது மீண்டும்சிறுபான்மை இனம் அடிமைப்படுத்தப்பட்டு மீண்டும்  பேரினவாதக் கொள்கைகlaதலைவிரித்தாடின. ஆனால் மைத்திரி ஆட்சியில் அவைகள் முடிவிற்ற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதனை நாம் இன்றும் நாளையும் ஏன் தொடர்ச்சியாகவும் கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments