கடந்த அரசாங்க காலத்தில் வாக்காளர்களுக்கு வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான முச்சக்கர இருக்கை வண்டிகள் (ட்ரைசைக்கிள்) நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மத்துகம தேயிலைத் தொழிற்சாலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றையடுத்து நேற்று பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த முச்சக்கர இருக்கை வண்டிகள் தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக அரச செலவில் கொண்டு வரப்பட்டவை என்றும், எனினும் தேர்தல் ஆணையாளர் அலுவலக கெடுபிடிகள் காரணமாக பகிர்ந்தளிக்க முடியாமல் போய்விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சுமார் 513 முச்சக்கர இருக்கை வண்டிகள் மத்துகம தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவை மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஜகத் பின்னகொட சம்பவ இடத்துக்கு வருகை தந்து, மேற்பார்வை செய்திருந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.


0 Comments