Subscribe Us

header ads

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
100 நாட்கள் திட்டத்தின் கீழ், மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கும் ஒரு நடவடிக்கையாக இந்த இடைக்கால வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தலைமையில் இன்று மதியம் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.
மக்களுக்கு அதிகளவிலான நிவாரணங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ள புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் இதற்குமுன்னர் காணப்பட்ட அரசாங்கங்களினால் இருவேறு இடைக்கால வரவு – செலவுத் திட்டங்கள் 1960 ஆம் ஆண்டும், 2009 ஆம் ஆண்டும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments