Subscribe Us

header ads

கத்தாரில் திப்பு சுல்தான் ஓவிய கண்காட்சி

‘மைசூர் புலி’ என வர்ணிக்கப்படும் திப்பு சுல்தானின் ஓவியங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய சில பொருட்கள் ஆகியவை கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகம், ‘புலியின் கனவு: திப்பு சுல்தான்’ என்ற பெயரில் தற்போது கண்காட்சி ஒன்றை நடத்துகிறது.
இதையொட்டி திப்பு சுல்தான் ஆளுகை தொடர்பான 24 ஓவியங்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதில் 1780-ல் ஆங்கிலேயே படைகளுக்கு எதிராக தனது தந்தை ஹைதர் அலியுடன் இணைந்து பொல்லிலூர் பகுதியில் திப்புசுல்தான் வீரத்துடன் நடத்திய போர் தொடர்பான காட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றன.
பழமை வாய்ந்த இந்த ஓவியங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மறுவேலைப்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஓவியங்களுடன், திப்பு சுல்தான் பயன்படுத்திய 481 கிலோ எடை கொண்ட பீரங்கி உள்ளிட்ட பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

Post a Comment

0 Comments