முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனநாயக ரீதியில் பதவியை விட்டு விலகினார் என்பது பொய்யான தகவல் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதியான முறையில் ஜனாதிபதி மஹிந்த ஆட்சி மாற்றத்திற்கு வழியமைத்தார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கூறுகின்றனர்.
எனினும் இந்த கூற்றுக்களில் உண்மையில்லை என்பதனை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
ஜனாதிபதியும் பிரதமரும் இதனை ராஜதந்திர அணுகுமுறையில் அணுகியுள்ளனர்.
இந்த தகவல்களை வெளியிடுவதன் மூலம் எனது பதவிகள் பறிபோகக் கூடும். எனினும் நாட்டு மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நான் இதனைக் குறிப்பிடுகின்றேன்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது.
அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாவிட்டால் ஆறு ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்சவிற்கு நடந்ததே நமக்கும் நடக்கும்.
முதலில் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதாக கூறிய மஹிந்த தற்போது மைத்திரிபால சிறிசேன புலிகளின் வாக்குகளினால் வெற்றியீட்டியதாக கூறுகின்றார்.
இந்தக் கூற்றுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ரஞ்சன் ராமநாயக்க நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


0 Comments