Subscribe Us

header ads

இலங்கை இளைஞர்களின் அடுத்த புரட்சியும் - 10 தகைமைகளும்

நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக இளைஞர்கள் என்ற வகையில் சமூக வளைதளங்கள் ஊடாக நாங்கள் பாரியதொரு பங்களிப்பை செய்திருக்கிறோம். ஆனால், அத்தோடு எங்கள் பங்களிப்புக்கள் முடிந்து விடக்கூடாது. நல்லாட்சிக்காக எங்கள் பங்களிப்புக்கள் தொடர்ந்தும் தேவைப்படுகின்றன.

அத்தோடு இந்த வெற்றியை முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் எமக்கு இருக்கிறது.


இன்னும் ஒரு சில மாதங்களிள் அரசியல் மேடை மீண்டும் சூடு பிடிக்கும். இனவாதம் தலைவிரித்தாடும். அதற்கு முகம் கொடுக்க நாம் இதைவிட பல மடங்கு வேளை செய்ய வேண்டும். அதற்கு நாம் எம்மை பல விதங்களிள் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எமக்கு தொடர்ந்தும் வெற்றிகிடைக்கும்.

10 பிரதான தகைமைகள்
************************************
1. தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து மற்றவர்களுக்குப் பகிர்பவர்களாக இறுத்தல்.


2. எமது சிங்கள, ஆங்கில மொழித் தேர்ச்சியை அதிகரித்துக்  கொள்ளுதல் (பேச்சு, எழுத்து, கிரகிக்கும் திறன்கள்)


3. இனவாத சிந்தனையை இல்லாமல் செய்து கொள்ளல்.

4. எங்கள் மார்க்க, மத அனுஷ்டானங்கள் தொடர்பான பூரணத் தெளிவைப் பெற்றுக் கொள்வதோடு எந்தக் கேள்விகளுக்கும் எந்த மொழியிலும் பதில் சொல்லுமளவுக்கு எம்மைத் தயார்படுத்திக்கொள்ளல்.

5. நாட்டுப்பற்றை எல்லா இடங்களிலும் வெளிப்படுத்தப் பழகிக்கொள்ளல்.

6. நடுநிலைமை சிந்தனையுடையவர்களாக இருத்தல்.

7. பெரும்பான்மை மக்களுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளல்.

8. கடந்த கால, சமகால எமது தலைவர்களின் கருத்துக்களை பிரதிபளிப்பவர்களாக நடந்து கொள்ளல்.

9. ஷைத்தானியத்தோடு கரைந்துவிடமால் எப்போதும் எமக்கென்று ஒரு தனித்துவத்தை வைத்ததுக்கொள்ள முயற்சித்தல்.

10. சமூக உணர்வோடு சிந்தித்து கூட்டாக செயற்படுதல்.

இவ்வாறு ஒரு புறத்தில் எல்லா விதங்களிலும் எம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில் எமது புரட்சியை விடாமல் தொடர்வோம்.


நல்ல நண்பன்,
முபாரிஸ் ஜே.எம்
உலப்பனை.

-HISHAM PX-

Post a Comment

0 Comments