Subscribe Us

header ads

ஆளும் கட்சியின் முஸ்லிம் அறிவு ஜீவிகள் முஸ்லிம் கட்சிகள் மீது குற்றச்சாட்டு!

அரச ஊதுகுழலான தினகரன் பத்திரிகையில்  வந்திருக்கும் செய்தி!
ரசாங்கத்திலிருந்து விலகுவது என்ற மட்டமானதொரு தீர்மானத்தை எடுத்தது மட்டுமல்லாது அதற்காக இன்னொரு மட்டமானதொரு காரணத்தையும் கூறிய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் செயற்பாடு இந்நாட்டில் வாழ்கின்ற முழு முஸ்லிம் சமுதாயத்தையும் தலைகுனிய வைத்துள்ளதாக முஸ்லிம் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், கல்விமான்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இறுதி நேரத்தில் இத்தகையதொரு மட்டமான முடிவை எடுத்தமையானது அக்கட்சிகளின் தலைவர்களது முடிவாகவே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது மக்கள் மீது அத்தலைவர்க ளால் மேடைகளில் திணிக்கப்பட்டு வருவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பத்து வருடங்களாக பதவிக்காகவும், அதன் மூலமாகக் கிடைக்கும் சலுகைகளுக்காகவும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்துவிட்டு திடீரென மாறி அடுத்தவரிடம் ஓடுவது என்பது முஸ்லிம் சமூகம் நன்றி இல்லாத சமூகம் என்றதொரு கருத்தை நாட்டிலுள்ள ஏனைய சமூகத்தவரிடையே பரப்பியுள்ளது.
இதற்கு முஸ்லிம் காங்கிரஸ¤ம், அகில இலங்கை முஸ்லிம் காங்கிர ஸ¤மே பிரதான காரணம் எனவும் அவ ர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
பேருவளைச் சம்பவம் அல்லது அனுராதபுர சம்பவம் அல்லது அன்று மாவனல்லைச் சம்பவம் அல்லது மாளிகாவத்தைச் சம்பவம் இடம்பெற்ற அடுத்த நாட்களில் தாம் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக இவர்கள் அறிவித்திருந் தால் அவர்களை சமூகம் அங்கீகரித் திருக்கும். ஆனால் இவர்கள் அன்று சமூகத்தைப் பார்க்காது தமது வசதிக ளையும், பதவிகளையும்,
வாகனங் களையும், பொலிஸ் பாதுகாப்பு பின் தொடர்வதையுமே பெருமையாகப் பார்த்தனர். இன்றுகூட தாம் விலகி நடுநிலையாக இருந்திருக்கலாம். ஆனால் நேற்றுவரை வாழ்த்தி வந்த ஒரு தலைவரை இன்று மேடையேறி தூற்றிக் கொண்டு திரிய இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? இதன் விளை வுகளை இவர்கள் அறியவில்லையா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Post a Comment

0 Comments