Subscribe Us

நான் ஏன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 170 மில்லியன் கடன் செலுத்த வேண்டும்? பணத்தை செலுத்தியே எரிபொருள் பெற்றேன்.

இன்று பாட்டளி சம்பிக்க ரணவக்க அவர்கள்  மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அதேவேளை தான் 170 மில்லியன் கடனில்லை ஏற்கனவே பணத்தை செலுத்தி விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொட நகரில் உள்ள இவரின்  எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 170 மில்லியன் கடன் செலுத்த வேண்டியிருப்பது பொய்யான தகவல் எனவும்  ,பணம் தராமல் பெற்றோல் வழங்கப்பட்டதில்லையெனவும் தான் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு கடனில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இனிமேல் பெற்றோல் வழங்க முடியாது என கூறப்பட்டதாலே நேற்றைய தினம் இவரின் பெட்ரோல்  நிலையம் மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் அவர் தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments