Subscribe Us

header ads

புத்தளம் சிறுபான்மையின மக்களும் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும்

புத்தளம் மாவட்டமானது புத்தளம், சிலாபம், வென்னப்புவஇ நாத்தாண்டிய மற்றும் ஆனமடுவ ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளை கொண்ட ஒரு மாவட்டம். சுமார் ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்காளர்கள் புத்தள மாவட்டத்தில் காணப் படுகின்றனர் (2015 ஜனாதிபதி தேர்தல்). புத்தளம் மாவட்டத்தில் இருந்து மொத்தமாக 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப் படுவார்கள். இதில் சிறுபான்மையாக காணப்படும் தமிழ் பேசக் கூடிய வாக்காளர்கள் சுமார் ஒரு இலட்ச்சத்து பதினைந்தாயிரம் வரை காணப் படுகின்றனர். ஆனால் விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் இது வரை எந்த ஒரு தமிழ் பேசக் கூடிய வேட்பாளரும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் படவில்லை என்பதே மிகவும் வேதனைக்குரிய விடயம்.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தேர்தல் தொகுதியிலேயே எண்பதாயிரம் வரையான முஸ்லிம் மற்றும் தமிழ் வாக்காளர்கள் காணப் படுகின்றனர். அதுபோல விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தமிழ் பேசும் ஒருவர் போட்டியிடுவதும் இந்த புத்தளம் தேர்தல் தொகுதியிலேயே. இருப்பினும் கடந்த காலங்களில் இடம்பெற்ற 6 விகிதாசார பொது தேர்தலிலும் யாரும் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை என்பது யாவரும் அறிந்த விடயமே. இதில் முக்கியமான விடயம் என்னவெனில்இ1989 ஆண்டு முதல் சுமார் ஒரு இலட்ச்சத்துக்கும் அதிகமான தமிழ் பேசும் வாக்காளர்களை கொண்டிருந்தும் கூட இன்னமும் ஒரு சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றிராமல் இருக்கும் ஒரே ஒரு மாவட்டம் புத்தளம் மாவட்டமே. கடந்த காலங்களில் போட்டியிட்ட மர்ஹூம் பிஸ்ருள் ஹாபிஇ நவாவிஇ பாயிஸ்இ எஹியாஇ இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் கமர்தீன் ஆகியோர் தோல்வியே அடைந்துள்ளனர். இவர்களின் தோல்விக்கு பின்னணி என்ன ? வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிறிது ஆராய்வோம்.

கடந்த காலங்களில் யானை சின்னத்திலும்இ கதிரை சின்னத்திலும்இ வெற்றிலை சின்னத்திலும் போட்டியடைந்தே இவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். அதாவது புத்தளம் மாவட்டத்தில் 11 வேட்பாளர்கள் களமிறங்கும் பொழுது அதில் ஒரே ஒரு வேட்பாளர் மாத்திரம் தமிழ் பேசக் கூடிய ஒருவராக இருப்பார். இதுவே இரண்டு பெரும்பான்மை கட்சிகளிலும் காணப் பட்ட ஒரே ஒரு ஒற்றுமை. இவ்வாறு இரண்டு பெரும்பான்மை கட்சிகளிலும் தமிழ் பேசும் தலா ஒரு வேட்பாளர் களமிறங்கும் பொழுது வாக்குகள் இரண்டாக பிரிந்து விருப்பு வாக்கு அடிப்படையில் பெரும்பான்மை சிங்கள வேட்பாளர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகின்றனர். 1989 முதல் 2001 வரை இடம்பெற்ற பொது தேர்தல்களில் மர்ஹூம் பிஸ்ருள் ஹாபி மற்றும் நவாவி ஆகிய இருவருக்கும் இதுவே நடந்துள்ளது. அதற்க்கு பின் போட்டியிட்ட தற்போதைய புத்தளம் நகர பிதா பாயிஸ் அவர்களுக்கும் இதே கதியே. புத்தளம் தேர்தல் தொகுதிக்கு அப்பால் உள்ள ஏனைய நான்கு தேர்தல் தொகுதிகளும் 90 வீதத்துக்கும் அதிகமான சிங்கள வாக்காளர்களை கொண்டுள்ள தொகுதி. புத்தளம் தேர்தல் தொகுதி மட்டுமே 65 வீதம் வரை தமிழ் பேசும் வாக்களர்களை கொண்டுள்ள அதே வேளைஇ மிகுதி 35 வீதம் வரை சிங்கள வாக்காளர்களே காணப் படுகின்றனர். புத்தளம் தேர்தல் தொகுதியில் இருந்து மற்ற தொகுதிகளுக்கு விருப்பு வாக்குகள் வழங்கப் படுவதை போல அந்த தொகுதிகளில் இருந்து புத்தளம் தேர்தல் தொகுதிக்கு விருப்பு வாக்குகள் கிடைக்காமல் இருப்பதும் கூட புத்தள மாவட்டத்தில் ஒரு சிறுபான்மை பிரதிநிதித்துவம் கிடைக்காமைக்கு ஒரு காரணம் என குறிப்பிட முடியும்.

புத்தளம் தேர்தல் தொகுதியில் ஒரு தமிழ் பேசும் பாராளுமன்ற பிரதிநிதுத்துவம் கிடைக்காமை பற்றி அண்மையில் தேர்தல் ஆணையாளர் கூட தனது கவலையை வெளியிட்டார். அது போல பாராளுமன்ற பிரதிநித்துவத்தை பெற்றுக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் பல்வேறு தரப்பால் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முன் வைக்கப் படுகின்றன. அதில் பெரும்பாலும் முஸ்லிம் காங்கிரசில் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிடும் பொழுது 11 பேரும் தமிழ் பேசும் நபர்களாக காணப்படுவர் எனவும் குறிப்பிட்ட ஒரு அளவு வாக்குகளை பெற்றால் நிச்சயம் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அநேகமானோர் தமது எதிர்வு கூறல்களை முன்வைக்கின்றனர். இது வெளிப்படையில் கடந்த மாகணசபை தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் பொழுது சரி என பட்டாலும் பெரும்பான்மை கட்சிகளில் ஒரு தமிழ் பேசும் வேட்பாளர் நிச்சயம் கட்சிகளின் தலைமை பீடத்தால் நிறுத்தப் படுவர். இதன் பொழுதும் முன்னைய காலங்களை போலவாக்குகள் பிரிவதை யாரும் தடுக்க முடியாது. உதாரணமாக சிறிலங்கா சுதந்திர கட்சியோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது மஹிந்த ராஜபக்ச ஆரம்பிக்கப் போகும் புதிய கட்சியோ புத்தளம் தேர்தல் தொகுதியில் தங்கள் கட்சியின் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள அந்த கட்சிகளின் அமைப்பாளர்களான பாயிஸ் மற்றும் நஸ்மி ஆகியோரை நிறுத்தியே தீரும். மிகுதி வேட்பாளர்கள் பத்து பெரும் நிச்சயம் தமிழ் பேசக் கூடிய வாக்களர்களாக இருக்க மாட்டார்கள் என்பதும் உறுதி. ஆக முஸ்லிம் காங்கிரசில் தனித்து போட்டியிட்டாலும் கூட முஸ்லிம் மற்றும் தமிழ் வாக்குகள் பிரிகின்ற பொழுது பெரும்பான்மை வேட்பாளர்களுக்கே அது இன்னும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கின்றது. முஸ்லிம் காங்கிரசில் வெற்றி பெற அதிகளவு வாய்ப்புக்கள் காணப் பட்டாலும் கூட தவிர்க்க முடியாத மேல குறிப்பிட்ட சில காரணிகள் இன்னமும் கேள்விக் குறியாகவே உள்ளன.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி கூட இன்னமும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானிக்க முடியாத நிலையிலேயே உள்ளனர். அதாவது வெற்றிலை சின்னம் இனி மேல் கிடையாது என்பது உறுதி. அது போல ஐக்கய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிடுமா என்பதும் இன்னும் உறுதி இல்லை. அன்னப் பறவை சின்னமும் கேள்விக் குறியிலேயே உள்ளது. உண்மையாக புத்தளத்துக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றே கூற வேண்டும். ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வாறு கட்சிகள் தங்களின் சின்னத்தை விட்டுவிட்டு பொதுவான ஒரு சின்னத்தில் இணைந்து போட்டியிட்டு ஜனாதிபதியாக மைத்திரிபால அவர்களை வெற்றி பெற செய்தார்களோ அது போன்ற ஒரு நடைமுறையை கையாள வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும், முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளரும் ஒன்றே ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும். ஒரே ஒரு தமிழ் பேசும் வேட்பாளர் களமிறங்கும் முறை மீண்டும் தோல்விக்கே வழி வகுக்கும். ஒரு கட்சியில் இருந்து கொண்டு இன்னொரு கட்சிக்கு வந்து சேருமாறு அழைப்பு விடுப்பதும் முட்டாள் தனம். யாரும் அவ்வாறு இணையப் போவதுமில்லை. அது சாத்தியமும் இல்லை. எனவே புத்தள தமிழ் பேசும் அரசியல் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்.

உதாரணம் :

கட்சி மற்றும் கொள்கைகளை விட்டுவிட்டு அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும்.

உதாரணம் :

சின்னம் : துடுப்பு மட்டை (BAT)

இலக்கம் :

01 – பாயிஸ்.
02 – அலிகான்
03 – நவவி
04 – எஹியா
05 – ரியாஸ்
06 – தாஹிர்
07 – நியாஸ்
08 – நஸ்மி
09 – முஹ்சி
10 – சப்றி
11 – தமிழ் வேட்பாளர் ஒருவர்

மேல் குறிப்பிட்டதை போல ஒரு சுயேச்சை சின்னத்தின் கீழ் நாம் ஒன்றிணைந்தால், சிறுபான்மை வாக்குகள் பிரிய சந்தர்ப்பமே இல்லை. எல்லோரும் ஒரே சின்னத்துக்கே வாக்குகளை வழங்குவார்கள். தங்களுக்கு விரும்பிய ஒருவருக்கு விருப்பு வாக்கினை வழங்குவது அவர்களின் உரிமை. எப்படியும் நிச்சயம் 40,000 வாக்குகளுக்கு மேலதிகமாக பெற முடியும்..நிச்சயம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வென்று எடுக்க முடியும். மேல குறிப்பிட்ட முறையினை தவிர வேறு எந்த வியூகமும் வெற்றி பெறப் போவதில்லை என்பது கடந்த கால தேர்தல் முடிவுகளில் நான் பெற்ற படிப்பினை.

மேலே நான் குறிப்பிட்டுள்ள முறையானது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று என யாரும் கூற முடியாது. யானைஇ மரம்இ வீடுஇ கைஇ சங்கு என பல்வேறு கட்சிகளின் தலைமகளும் தேசிய ரீதியில் தங்களின் சின்னங்களை விட்டு விட்டு ஜனாதிபதி தேர்தலுக்காக ஒன்றிணைய முடியும் என்றால் நாம் புத்தளம் மாவட்டத்தில் ஒரு தமிழ் பேசும் பிரதிநிதியை பெற ஏன் ஒன்றிணைய கூடாது ? பெரும்பான்மை கட்சிகளில் 10 பேர் சிங்கள வேட்பாளர்களும் ஒருவர் மட்டும் தமிழ் பேசும் ஒருவராகவும் இருந்து கொண்டு வெற்றி பெறுவது என்பது நீரின் அடியில் நெருப்பை கொண்டு செல்வது போன்றது என்பதை புத்தள சிறுபான்மை சமூகம் நன்கு அறிந்தும் வைத்துள்ளதுடன் கடந்த தேர்தல்களில் அனுபவமும் உள்ளது. எனவே இன்னமும் நாம் யானை சின்னத்துக்கும் கை சின்னத்துக்கும் வெற்றிலை சின்னத்துக்கும் பொது தேர்தலில் வாக்களித்து வாக்களித்து சோற்றில் கிடக்கும் கரி வேப்பிலை ஆகிய காலம் போதும். நாம் வாக்களிக்க ஆனமடுவேயில் இருந்தும் வென்னப்புவயில் இருந்தும் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சென்ற காலம் போதும். மக்களை ஒன்ற்னைக்க முன் தலைமைகள்ழனெசர பட வேண்டும். தலைமகள் ஒன்று பட்டு இம்முறை பெரும்பான்மை கட்சிகளை தவிர்த்து பொதுவான ஒரு சின்னத்தில் போட்டி இட்டால் நிச்சயம் வெற்றி கனியை பறிக்க முடியும் என்பதே எனது தனிப்பட்ட அரசியல் ஆய்வில் நான் கண்ட வியூகம். எனவே இம்முறை சிந்தித்து ஒன்றுபட்டு சிறந்த ஒரு முடிவுக்கு வருவதன் மூலம் எமது மாவட்டத்தின் சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநித்துவத்தை உறுதி செய்வோம்.

செய்யத் பினோஸ்.
புத்தளம்.

Post a Comment

0 Comments