Subscribe Us

header ads

அதிக கோபம் - ஆபாய நோய்களை ஏற்படுத்தும்!

அதிக கோபம் மாரடைப்பு அல்லது பாரிசவாதம் ஏற்பட காரணமாக அமையலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான கோபம் மாரடைப்பை தோற்றுவிக்கலாம் அல்லது மாரடைப்பு ஏற்பட தூண்டுதலாக அமையலாம் என அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிக கோபமுற்று 2 மணித்தியால காலப்பகுதியில் இதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதென குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருதய கோளாறு உள்ளவர்கள் கோபம் காரணமாக அதிக ஆபத்தினை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக இருதயம் தொடர்பான ஐரோப்பிய ஆய்வு சஞ்சிகை ஒன்றிற்கு குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக கோபமுற்று இரண்டு மணித்தியால காலப்பகுதியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு சாதாரண நிலையிலும் பார்க்க 5 மடங்கு அதிகமாக உள்ளது எனவும், பாரிசவாதம் எற்படுவதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் எனவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் கோபத்திற்கும் மாரடைப்பிற்குமான தொடர்பை உறுதிபட கூறுவதற்கு தொடர்நதும் ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மன அழுத்தத்தினை குறைக்கும் வழிமுறைகள் ஊடாக ஆபத்தினை குறைக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments