Subscribe Us

நாங்கள் திரும்பிவரமாட்டோம்: ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் குழந்தையுடன் இணைந்த பெண்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் குழந்தையுடன் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் ஸ்டாபோர்ஷைர் (Staffordshire) நகரை சேர்ந்த Tareena Shaki என்ற பெண் தன் குழந்தையுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு கடந்த நவம்பரில் சிரியாவிற்கு பறந்துள்ளார்.

இதன்பின் அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் அமைப்பில் இணைந்த அவர் தன் குழந்தையுடன் செல்பி படத்தை எடுத்துக்கொண்டு, இனி நாங்கள் திரும்பிவரமாட்டோம் என்ற செய்தியை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் இணைந்தது தவறு என்பதை உணர்ந்த அவர், சிரியாவின் ரக்கா (Raqqa) நகரை கடந்து தப்பிக்க முயன்றுள்ளார்.இந்நிலையில் அவன் துருக்கி நாட்டின் எல்லையின் அருகே சென்றபோது துருக்கிய அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.

அப்போது அவரிடம் அங்கிருந்த துருக்கிய அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் உண்மையை கூறவில்லை என்றால் சுட்டுவிடுவோம் என அவரை அதிகாரிகள் மிரட்டவே, தன்னையும் தன் குழந்தையும் சுட வேண்டாம் என அவர் கெஞ்சியுள்ளார்.

இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை கூறுகையில், சமீபத்தில் விவகாரத்து பெற்ற என் மகள் சுற்றுலா செல்வதாய் கூறிவிட்டு சிரியாவுக்கு சென்றுள்ளார் என்றும் கடந்த வருடத்திலிருந்தே அவர் பேஸ்புக்கில் தீவிரவாத தன்மை மிக்க வாசகங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தாள் எனவும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments