Subscribe Us

இஸ்லாத்தின் வரலாறு என்பது ஒரு தெளிவான அரசியல் போராட்ட வரலாறே...!

-Afham Nizam Shafeek Jalali-
[சிந்தனை வீழ்ச்சி காரணமாக முஸ்லீம் தன்னை சூழ்ந்துள்ள இத்தகு நிலைப்பாட்டின் மூலமே, குஃப்ரிய அதிகார வடிவத்தையும் (குஃப்ரிய தீன்), அதன் சட்ட திட்டங்களையும் (குஃப்ரிய ஷரீஆ) அரசியல் வேறு மதம் வேறு என்ற அடிப்படையில் இடைக்காலத்தில் பின்பற்ற முடியும் என தவறாக கருதிக் கொண்டிருக்கின்றான். இந்த தவறான அளவுகோல் இஸ்லாமிய அரசியல் மற்றும் அதற்கான போராட்டம் என்பவற்றில் இருந்து முஸ்லிமை தெளிவாகவே திசை திருப்பியுள்ளது.

இறைவனை வணங்குதல் என்பதன் இஸ்லாம் கூறும் அர்த்தம் அந்த இறைவனுக்காக வாழ்தல் அவனுக்காக மரணித்தல் எனும் அரசியலையே ஆகும்.

இந்த வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட அவனது சகல அசைவுகளையுமே இபாதத் என்ற நிலையில் இஸ்லாம் கணிக்கிறது. இன்னும் அந்த இபாதவை இப்படித்தான் செய்ய வேண்டும் என ஷரீஆ மூலம் வரையறுக்கிறது இபாதத் என்ற சொல்லின் அர்த்தத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் அரசியலை அவன் பிரதிநிதியாக நின்று இறை மறுப்பு அதிகாரங்களுக்கு சவாலாக அறிமுகப்படுத்தும், அடையாளப்படுத்தும் அரசியல் வாதியாக தனது இயலாமையிலும் வாழ்வதே உண்மை முஸ்லிமின் முன்மாதிரி அடையாளமாகும்.

முஸ்லீம்களாகிய நாம் எமக்குள் எம்மை சில உசூல் விடயங்களுக்காக வேறுபடுத்தி பிரிந்து போவது, எம்மிடமிருந்து இஸ்லாத்தை அழிக்கவும், அது முடியாதபோது எம்மையே அழிக்கவும் தயாராக உள்ள குஃப்ரிய பொது எதிரிக்கு உதவுமே தவிர இஸ்லாத்தை நிலை நாட்ட உதவவே உதவாது.....

Post a Comment

0 Comments