Subscribe Us

header ads

நர்ஸ் செய்த அட்டகாசம் 87 நோயாளிகளை கொன்று பிணங்களுடன் செல்பி.(PHOTOS)


இத்தாலிய நாட்டை சேர்ந்த செவிலிய பெண்மணி ஒருவர், 87 நோயாளிகளை கொலை செய்து செல்பி எடுத்தாரா என்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரித்து வருகின்றனர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் லூகோ நகரிலுள்ள உம்பர்டோ மருத்தவமனையில் சுமார் 38 நோயாளிகளை கொலை செய்து செல்பி எடுத்த குற்றத்திற்காக (Daniele Poggiali Age-42) என்ற செவிலிய பெண்மணியை பொலிசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் விசாரணை செய்ததில், அந்த செவிலிய பெண்மணி பணியாற்றிய இரண்டு ஆண்டுகளில் 87 நோயாளிகள் வழக்கத்துக்கு மாறாக இறந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுவும் அந்த பெண்மணியால் ஏற்படுத்தப்பட்ட மரணங்களாக இருக்குமா? என்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிறையில் நடந்த விசாரணையில் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் கூறி தான் இவ்வாறு செய்தாகவும், அதிக நேரங்கள் பணி செய்வதால் வந்த மன உளைச்சலும் இதற்கு காரணம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும் தான் செய்தது தவறு தான் என்றும் அது தனக்கு நன்றாக புரிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, அந்த செவிலியப் பெண்ணை ஜாமீனில் வெளியே விட்டால் சமூதாயத்திற்கு ஆபத்து என்றும், தீர்ப்பு வரும் வரை சிறையிலேயே இருக்க உத்தரவிட்டுள்ளார்.



Post a Comment

0 Comments