கற்பிட்டி பிரதேசத்தில் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி பிரதேசத்தை சேர்தவர். இவர் 7 வயதுடைய சிறுமி ஒருவரையே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
கைதான சந்தேக நபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளர்.
சிறுமி தனியாக வீட்டிலிருந்தபோது சந்தேக நபரால் நேற்று முன்தினம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

0 Comments