கொழும்பு, தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள களஞ்சிய சாலையொன்றுக்கு எடுத்து வரப்பட்ட சுமார் 60,000 சட்டவிரோத மதுபான போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு லொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் களஞ்சிய சாலைக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 1 கோடியைத் தாண்டும் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட களஞ்சியசாலையும் வர்த்தகமும் முன்னாள் அரசின் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானவை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


0 Comments