இந்நிகழ்வுஏறாவூர் மட்ஃமமஅறபாவித்தியாலயத்தில் 05.12.2015ஆம் திகதிபிற்பகல் 4.00 மணியளவில் அமைப்பின் தலைவர் ஜனாப். மு.முகம்மது அஸ்ரப் அவர்களதுதலைமையில் இடம்பெறதுடன், இந்நிகழ்வுக்குஏறாவூர் நகரபிரதேசசெயலகத்தின் பிரதேசசெயலாளர் ஜனாப்.எஸ்.எல்.எம்.கனீபாஅவர்களும்,ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் அவர்களும் பிரதானஅமைப்புஅதிதிகளாககலந்துகொண்டனர்.
அத்துடன்கிழக்குபல்கலைக்கழக இஸ்லாமியகற்கைகள் துறைவிரிவுரையாளர் அல்ஹாபில்.எம்.பி.பௌசுள் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில்,அமைப்பின் தலைவர் தலைமையுரையாற்றும் போது,தமதுநிறுவனம் சமூகஉணர்வுடன் மக்கள் நலனில் அக்கரைகொண்டுஅறிவியல் நோக்கி;ல் ஆராய்ந்து,திட்டமிட்டுசமூகவிடயங்களைகையாள்வதாகவும் ஒர இணைப்பாளராக இருந்துதேவையுடையவர்களையும் அதனைதீர்த்துவைப்பவர்களையும் இனம் கண்டு,அத்தேவையினைபூர்த்தியாக்குவதனைபிரதானபணியாகச் செய்வதாகவும் கூரியதுடன், இந்நிகழ்வுசிறப்பாகநடைபெறபங்காற்றியஅனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார்.
விரிவுரையாளர் அல்ஹாபில்.எம்.பி.பௌசுள் அவர்கள் சிறப்புரையாற்றும் போது, இஸ்லாமியஅடிப்படையில் கல்விக்கானமுயற்சியும் அதற்குஉதவிசெய்யும் செயற்பாடும் மிகஉயர்ந்ததாகபார்க்கப்படுவதுடன், இறைவனிடத்தில் அதற்கானசன்மானமும் கனதியானதென்றுவிரித்துரைத்தார்.
தொடர்ந்து,பிரதானஅமைப்புஅதிதி ஜனாப்.எஸ்.எல்.எம்.கனீபாஅவர்கள் உரையாற்றும் போது,கற்றல் செயற்பாட்டினைவறுமைதடுத்துவிடக்கூடாதுஎன்பதற்காகசெய்யப்பட்ட இந்தமுயற்சிகாலத்தின் தேவையுணர்ந்துசெய்யப்பட்டுள்ளதாகவும் வறுமையுடன் பிறந்துவறுமையுடன் மரணிக்காது,அதனைவெற்றிபெறமாணவர்கள் முயற்சிக்கவேண்டும் என்று கூறியதுடன், இப்பணிக்குப்பின்னால் உள்ளஅத்தனைபேரையும் பாராட்டினார்.
இந்நிகழ்வில் இறுதிஅம்சமாக,வறுமையினால்,மேலும் கல்வியைதொடர இயலாதநிலையிலுள்ளமாணவர்கள் 100 பேருக்குபாடசாலைஉபகரணங்கள் (பாடசாலைபை,பயிற்சிக் கொப்பி,பேனை,பென்சில்,கொம்பாஸ்,பாதணி) வழங்கப்பட்டன. ஏறாவூர் முழுவதுமுள்ள (ஏறாவூர் பற்றுஉள்ளடங்களாக) கிராமஅலுவலர் பிரிவுரீதியாகபயணாளிகள் தெரிவுசெய்யப்பட்டதுடன், இன நல்லுறவைஏற்படத்தும் நோக்கில் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இதன் போதுபாடசாலைஉபகரணங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இறுதியாக, இந்நிகழ்வுடன் தொடர்புடைய அனைவரையும் பாராட்டியதுடன்,துணைநின்றோருக்கு ( விசேடமாக கடல் கடந்துள்ளவர்களுக்கு ) அமைப்பின் செயலாளரினால் நன்றிதெரிவித்கப்பட்டது.
ஜனாப்.எம்.எச்.யஹ்யா
செயலாளர்
சமூகஆய்வுநிறுவனம்








0 Comments