Subscribe Us

header ads

ஓராண்டு பூர்த்தியில் The Zahirians "12" (PHOTOS)

"அல்ஹம்துலில்லாஹ்..!


நம் பயனத்தின் வெற்றிகரமான ஒரு வருட காலத்தை அல்லாஹ்வின் பேருதவியுடன் நிறைவு செய்து புதிய நிர்வாகத்துடன், புதிய உத்வேகத்துடன் பல எதிர்ப்பார்ப்பக்கு மத்தியில் நம் வெற்றி பயணத்தின் 2ம் வருடத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளோம்" என மனதார பெருமிதம் கொள்கின்றனர் Zahirians'12.


சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு சாஹிரா பாலர் பாசறையில் உருவாகிய இந்த Zahirians'12 சாஹிரா தேசிய கல்லூரியில் 2009 ஆம் ஆண்டில் சாதாரன தரத்தில் மற்றும் 2012ஆம் ஆண்டில் உயர்தரத்தில் சகபாடிகளாக இருந்த அணைவரையும் ஒன்றிணைத்த ஒரு Batch unity ஆகும்.

இன்று புத்தளத்தின் புதிய கலாச்சாரம் தான் சங்கங்களை உருவாக்குவது, ஆனாலும் சங்கங்கள் பல உருவாகியும் இன்று பல அவற்றின் பலவற்றை காணமுடியாத இந்த சூழ்நிலையிலும் தமக்கென ஒரு நாமம், தமக்கென ஒரு நிர்வாகம், தமக்கென தூரநோக்கு என தொடர்ந்த தம் பயணத்தின் இரண்டாவது வருடத்தை ஆரம்பிக்கும் முகமாகவும், நம் முதல் வருடத்தில் நாம் கடந்து வந்த பல சாதனையின் அடிச்சுவடுகளை மீட்டுவதன் முகமாகவும் சுமார் இரவு 7.45 அளவில் தன் உதிப்பிடமான சாஹிரா பாலர் பாசறையின் பிரதான மண்டபத்தில் Nasik Hasan இனால் ஓதப்பட்ட திருமறையின் சில வரிகளுடன் ஆரம்பிக்கபட்ட எம் முதலாவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் முத்த ஆசிரயர் புத்தளம் வலய கல்வி பணிமனையின் தமிழ் பிரிவிற்கு பொறுபபான உதவிக்கல்விப் பணிப்பாளர் Z.A Zanhir அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கலந்துகொண்டார்.

Roshan Ashraf இனால் வழங்கப்பட்ட Zahirians'12பற்றிய சிறிய அறிமுகத்துடன் நிகழ்வுகள் தொடர்ந்தது.


நிகழ்ச்சி நிரலின் படி அதிதி உரைக்கான நேரமும் வந்தது. "பழமை புத்தள சமுகத்தில் இயக்கங்கள் சங்கங்களின் தோற்றம் பங்களிப்பு" எனும் தொனிப்பொருளில் உரை நிகழ்த்தினார். மேலும்  அன்றும் இன்றும் புத்தள சமூகம் இவ்வாறான சங்கங்களிடம் இருந்து எதிர்பார்பது என்ன என்பதையும் மிக தெளிவாக அவருக்கே உரிய பாணியில் விளக்கி சுவாரஷ்யமான, பல கருத்துகள் பொதிந்த தன் உரையை நிறைவு செய்தார்

கூட்டத்தின் முக்கிய அங்கமான புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைப்பெற்றது. Sarafath அவர்களின் தலைமையில் நீதமான முறையில் நடாத்தபட்ட தேர்தலில் வருகை தந்த சுமார் 60 ற்கும் மேற்பட்டோர் வாக்களித்தது மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் இருக்கும் நம் நண்பர்களுக்கும் WhatsApp, SMS மூலமாக வாக்களிக்க கூடிய வசதிகள் செய்யபட்டிருந்தது குறிப்படத்ததக்க ஓரு விடயமாகும்.

தேர்தலின் முடிவும் வந்தது Abdhul Fathir இன் தலைமையில் யாப்பு படி 17 பேர் கொண்ட புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டு அணைத்து பணிகளும் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டது.

புதிய நிரர்வாகம்

01. தலைவர்- Abdhul Fathir
02. செயலாளர்- Thameem Sharaaf
03. உதவி தலைவர்- Abdhul Raheem
04. உதவி செயலாளர்- Raslan
05. அமைப்பாளர்- Roshan Ashraf
06. உதவி அமைப்பாளர்- Mohamed Sarafath
07. தவிசாளர்- Mohamed Rishaf
08. கல்வித்துறை பொறுப்பாளர்- Aathif Ali
09. சுகாதாரத்துறை பொறுப்பாளர்- Mohamed Hasan
10. விளையாட்டுத்துறை பொறுப்பாளர்- Mohamed Rifkan
11. சமூக சேவை துறை பொறுப்பாளர்- Mohamed Ithaf
12. ஊடக பொறுப்பாளர்- Nafly Hussain
13. உதவி ஊடக பொறுப்பாளர்- Mohamed Anfas

நிர்வாக கழு அங்கத்தவர்கள்(4)

1. Hanan Ahmed
2. Salman Faris
3. Asran Ahmed
4. Mohamed Falih


குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவென்றால் நிர்வாகத்தினுள்  அணைத்து பஜார்களயைும் பிரதிநிதித்துவபடுத்தபவர்கள் உள்ளடங்குவது ஆகும்.

நிகழ்வு இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது. முதற்கண் வல்ல அல்லாஹ்வுக்கும், மேலும் இந்ந நிகழ்வை ஏற்பாடுசெய்த ஏற்பாட்டுக்குழுவுக்கு, மண்டபத்தை வழங்கிய கல்லூரி அதிபர் ஹில்மி  அவர்களுக்கும் எம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.








-Zahirians'12 media-

-HANAN Ahmed-

Post a Comment

0 Comments