Subscribe Us

header ads

இளநீர் தேங்காய் புட்டிங் (வாய் ஊறுதா அப்ப ட்ரை பன்னுங்க Ladies)


இளநீர் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை தணிக்கும். . இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இதிலுள்ள தாது உப்புகள் வியர்வையால் நாம் இழக்கும் சக்தியை திரும்பத் தரக் கூடியது. அந்த இளநீரை பயன்படுத்தி ஒரு அருமையான  இளநீர்
தேங்காய் புட்டிங் செய்முறை  கொடுக்கப்பட்டுள்ளது


 தேவையானவை :

கடல் பாசி - 15 கிராம்

பால் மேடு - 250கிராம்
  
பால் -200 மில்லி

இளநீரில் இருக்கும் வழுக்கை தேங்காய்-200கிராம்

இளநீர் - 250மில்லி


செய்முறை :


ஒரு அகலமான பாத்திரத்தில் இளநீர் ஊற்றி கடல்பாசி  சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்க விடவும் பின்னர்.கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது பாத்திரத்தை  அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

இறக்கி வைத்திருக்கும் கடல்பாசி கலந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். அதில் பால்மேடு சேர்த்து நன்கு கலக்கவும் பின்னர் காய்ச்சி ஆறிய பாலை சேர்த்து நன்கு கலக்கவும் 

பின்னர் இளநீரில் இருக்கும் வழுக்கை தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும் அத்துடன்  வழுக்கை தேங்காய்  துண்டுகள் சேர்த்து  கலக்கவும். கலவை ஆனது லேசாக கெட்டி ஆகும். அதனை விரும்பிய வடிவில் ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.குளிர்ச்சியடைந்ததும் எடுத்து பரிமாறலாம் இப்போது சுவையான  இளநீர் தேங்காய் புட்டிங்  தயார்.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments